சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு! தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்! இத ரசிக்க 2 கண்கள் போதாது

தமிழகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காக ஃபோர்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவல்லர் சொகுசு விமானத்திற்கு இணையாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ச்சியாக காணலாம்.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

மேற்கத்திய நாடுகளில் மட்டுமே காணப்பட்டு வந்த வாகனங்களை மாற்றியமைக்கும் கலாச்சாரம் சமீபகாலமாக இந்தியாவிலும் அரங்கேறி வருகின்றது. அதிலும், கடந்த சில வருடங்களாக இதன் எண்ணிக்கை நினைத்து பார்த்திராத வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வாகனங்கள் சார்ந்து வெளியாகும் செய்திகளில் தினந்தோறும் வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவல் இடம்பிடித்து விடுகின்றன.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

அந்தவகையில், சொகுசு விமானத்தையே தோற்கடிக்கின்ற வகையில் பல்வேறு அம்சங்களுடன் மாறியிருக்கும் ஃபோர்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவல்லர் மினி வேனைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதுகுறித்த வீடியோவை ஐயம் பிரின்டோவ் என யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கேரவன் எனப்படும் வீட்டைப் போன்ற அமைப்புடைய சொகுசு வாகனங்களின் விற்பனை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. ஏன், இதுமாதிரியான வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்றே கூறலாம்.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

இதன் காரணத்தினாலேயே பெரும்பாலான நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுக்கு தேவையான சொகுசு வசதிகளை மினி வேன் அல்லது பேருந்து ஆகியவற்றை மாடிஃபைச் செய்துப் பெற்றுக் கொள்கின்றனர்.

அந்தவகையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்காக ஃபோர்ஸ் மினி வேனின் உட் (கேபின்) பகுதி நம்ப முடியாத அளவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

ஆனால், இந்த டெம்போ டிராவல்லர் யாருக்காக உருமாறியிருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், இந்த பிரம்மிக்க வைக்கும் மாற்றத்தை கேரளாவைச் சேர்ந்த வாகன மாடிஃபிகேஷன் நிறுவனமான ஜோஷ் டிசைன்ஸே செய்திருக்கின்றது. இவர்களின் கை வண்ணத்தினாலயே டெம்போ டிராவல்லர் ராயலான உட்பகுதியைப் பெற்றிருக்கின்றது.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

இதற்காக மினி வேனின் உட்பகுதி முழுமையாக மறு சீரமைக்கப்பட்டுள்ளதே என்றே கூறலாம். கேபினுக்குள் இருந்த இருக்கை மற்றும் பிற அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ஓட்டுநர் பகுதியைத் தவிர பிற அனைத்தும். இதைத்தொடர்ந்தே, விமானத்தின் உட்பகுதிக்கு இணையான அம்சங்கள் அதில், சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

அதாவது, படுக்கையைப் போல் மிக அதிகளவில் சாயும் தனி இருக்கைகள் மற்றும் இருவர் சொகுசாக படுத்து உறங்குகின்ற வகையில் படுக்கை அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த படுக்கையை தேவைப்பட்டால் இருக்கையாக (ஷோஃபா) மாற்றிக் கொள்ள முடியும். அதற்கேற்ப ரயில் இருக்கையைப் போல் மடித்து வைத்துக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

இது சொகுசு விமானத்திலேயே இல்லாத ஓர் வசதியாகும். இத்துடன், டிவி, ஃபிரிட்ஜ் மற்றும் எலக்ட்ரானிக்கலாக கட்டுப்படுத்தக் கூடிய கதவுகள் உள்ளிட்டவையும் இந்த மினி வேனில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும், விமானத்தின் உட்பகுதியைப் போல் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக வேனின் ரூஃப் மற்றும் தரை பகுதிகளில் பாலிஷ் செய்யப்பட்ட மரப் பலகை, ஆடம்பர துணி மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

இவற்றுடன், கட்போர்ட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, ஸ்பிளிட் ஏசி, ஜெனரேட்டர், இன்வெர்டர், சோனி மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த வேனில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

மேலும், வேனின் உட்புறத்தில் மட்டுமின்றி வெளிப்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, வேனின் வெளிப்புறத்திற்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும் விதமாக கார்களில் காணப்படக் கூடிய ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கின்றது.

சொகுசு விமானத்தை விஞ்சும் பேரழகு... தமிழருக்காக உருமாறிய ஃபோர்ஸ் டிராவல்லர்... இத ரசிக்க 2 கண்கள் போதாது!

இதற்காக ஹோண்டா சிவிக் காரின் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், முகப்பு பகுதி பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதில் முன்பு பொருத்தப்பட்டிருந்த எஃப் (ஃபோர்ஸ்) சின்னம் நீக்கப்பட்டு பென்ஸ் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அலாய் வீல், சஸ்பென்ஷன் மற்றும் வேனின் பின்பகுதி ஸ்டைல் உள்ளிட்டவைம் மாற்றப்பட்டிருக்கின்றது.

இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்காகவே செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் யார்? இந்த மினி வேனைக் கட்டமைக்கப்பதற்கான செலவு உள்ளிட்டவை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதன் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. மேலும் இந்த மினி வேனில் இவ்வளவு அம்சங்களாக என ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Force Traveller Converted Into Luxurious Caravan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X