2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான தயாரிப்பான ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல் மறைப்பு எதுவுமின்றி சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2020மை ஃபோர்ஸ் குர்கா உள்பட தனது மொத்த பிஎஸ்6 தயாரிப்புகளையும் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியிருந்தது.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இதில் ஒன்றான பிஎஸ்6 ட்ராக்ஸ் க்ரூஸர் மாடல் தான் தற்போது கர்நாடகாவில் சந்தேகட்டே - உடுப்பி நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. துளியும் மறைப்பால் மறைக்கப்படாமல் இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 மாடல் தயாரிப்பு பணிகள் முழுவதையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளிக்கிறது.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இந்த சோதனை ட்ராக்ஸ் மாடலில் பொருத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற மத்திய பிரதேச நம்பர் ப்ளேட், இந்த வாகனம் மத்திய பிரதேசம், பிதாம்பூரில் உள்ள ஃபோர்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இதுமட்டுமின்றி கார் டீலர்ஷிப்பின் இருப்பிடத்தை குறிக்கும் விதமாக மங்களூர் ஃபோர்ஸ் ஸ்டிக்கரையும் இந்த சோதனை வாகனத்தில் பார்க்க முடிகிறது. இதன்மூலம் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் மாடல் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதையும், இந்த சோதனை டீலர்களால் நடத்தப்படுவதையும் அறிய முடிகிறது.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இயக்க ஆற்றலிற்கு 2.6 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினை பெற்றுள்ள 2020 ட்ராக்ஸ் மாடலில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இந்த கியர்பாக்ஸ், என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் 90 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு வழங்கும்.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

160மிமீ-ல் க்ரவுண்ட் கிளியரென்ஸ் உடன் விற்பனைக்கு வரவுள்ள 2020 ட்ராக்ஸ் க்ரூஸர் மாடலில் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்ட முன்பகுதி, ட்யூல்-டோன் டேஸ்போர்டு, அப்டேட்டான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வெண்ட்ஸ், பக்கவாட்டு க்ராஃபிக்ஸ், பவர்-அசிஸ்ட் ஹைட்ராலிக் ஸ்டேரிங் சக்கரம், ஏபிஎஸ்+இபிடி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இவை தவிர்த்து 2020 ஆட்டோ எக்ஸ்போ காட்சிக்கு பிறகு இந்த 2020 மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் பாகங்கள் குறித்த தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. ஃபோர்ஸ் நிறுவனம் இந்த எம்யூவி மாடலின் பெயரை ஏற்கனவே அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டதால் இதன் எக்ஸ்ஷோரூம் விலைகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

நமக்கு தெரிந்தவரை இதன் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆம்புலன்ஸ், பள்ளி வாகனம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ட்ராக்ஸ் மாடலுக்கு ஃபோர்ஸ் நிறுவனம் 3-வருட/ 30 ஆயிரம் கிமீ உத்தரவாதம் உள்ளிட்டவற்றை ஆறு இலவச சேவைகளுடன் வழங்கி வருகிறது.

2020ஆம் ஆண்டிற்கான ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் க்ரூஸர் பிஎஸ்6 மாடல்... கர்நாடகாவில் சோதனை ஓட்டம்..

இவற்றுடன் எதிர்காலத்திற்காக ‘100 சதவீத எலக்ட்ரிக் மிஷன்' என்ற திட்டத்தையும் இந்நிறுவனம் கையில் வைத்துள்ளது. இந்த திட்டத்தின்படி பிரபலமான ஃபோர்ஸ் டி1என் என்கிற டெம்போ ட்ராவலர் முழு-எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படவுள்ளது. மேலும் இதன் பிஎஸ்6 டீசல் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் சமீபத்தில் கண்டறியப்பட்டு இருந்தது.

Most Read Articles
English summary
2020 Force Trax Cruiser BS6 Spied Undisguised – Launch Soon
Story first published: Thursday, August 13, 2020, 20:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X