ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

ஃபோர்ஸ் நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது போது கண்டறியப்பட்டுள்ளது. புனே அருகே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் இனி காண்போம்.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த பிஎஸ்6 கார் தற்போதைய ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் மாடலை விட மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

புதிய முன்புற க்ரில், புதிய ஹெட்லைட் அமைப்பு மற்றும் ரீ-டிசைனில் பம்பர் உள்ளிட்டவை இந்த புதிய பிஎஸ்6 காரின் முன்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களாகும்.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

முன்புறத்தில் மட்டுமில்லாமல் பின்புறத்திலும் வித்தியாசமான டிசைனில் தான் பம்பரை இந்த கார் பெற்றுள்ளது. இத்துடன் பின்புற கதவின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. மற்றப்படி புதிய ட்ராக்ஸ் டூஃபான் காரின் உட்புறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

நமக்கு தெரிந்து வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்டிற்கு இணையாக இந்த கார் உட்புறத்தை பெறும் தெரிகிறது. தற்சமயம் விற்பனையாகி வரும் ட்ராக்ஸ் டூஃபான் மாடலில் 2.0 லிட்டர் மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட டீசல் என்ஜினை ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

இந்த டீசல் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் அதிகப்பட்சமாக 66 பிஎச்பி பவரையும் 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் என்ஜினின் தரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்பது தெரியவில்லை.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

எதுவாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை காத்திருப்பது நல்லது. ஃபோர்ஸ் நிறுவனம் ட்ராக்ஸ் டூஃபான் மாடலில் பாதுகாப்பு அம்சங்களையும் புதியதாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை என்னென்ன குறித்த எந்த செய்தியும் இல்லை.

ட்ராக்ஸ் டூஃபான் மாடலின் தற்போதைய பிஎஸ்4 கார் ரூ.8.06 லட்சத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை பிஎஸ்6 மாற்றத்தால் ரூ.12,000 அதிகரிப்பை பெறவுள்ளது.

ஃபோர்ஸ் ட்ராக்ஸ் டூஃபான் பிஎஸ்6 மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டம்...

ஆம்புலன்ஸ், டூஃபான், க்ரூஸர், க்ரூஸர் பள்ளி வாகனம், க்ரூஸர் டீலக்ஸ் மற்றும் டூஃபான் டீலக்ஸ் உள்ளிட்ட அன்றாட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதமாக அதிகளவில் இருக்கைகளுடனும் காலி இடங்களுடனும் ஃபோர்ஸ் நிறுவனம் ட்ராக்ஸ் மாடலை வடிவமைத்துள்ளது. இந்த வேலைப்பாடுகளுக்கு பயன்படும் ட்ராக்ஸ் மாடல் ரூ.7.04 லட்சத்தில் இருந்து ரூ.9.50 லட்சம் வரை இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக விளங்குகின்ற ட்ராக்ஸ் டூஃபான் மாடலை நகர்புறத்திற்கு ஏற்ற விதத்தில் தான் இந்நிறுவனம் வடிவமைத்திருந்தது. ஆனால் இந்த மாடல் கார் நகர்புறத்தை காட்டிலும் சிறிய சிறிய கிராமங்களில் கூட அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

Source: Rushlane

Most Read Articles

English summary
Spy Pics: Force Trax Toofan BS6 Model Spotted Testing Ahead Of India Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X