வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி! நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு! இது பழைய கார்களுக்கும்தான்

ஃபோர்டு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால வாரண்டியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

இந்தியாவில் விழாக் காலம் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது. இந்த காலத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகை மற்றும் தனித்துவமான திட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் தசேரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வந்தநிலையில், தற்போது தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

இந்நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் மனதைக் கவர வேண்டும் என்பதற்காக சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால உத்தரவதாதத்தை வழங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் தற்போது நடைமுறையில் இருக்கும் குறைந்த கால வாரண்டியை ஆறு ஆண்டுகள் வரை உயர்த்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

இத்துடன், மறு தேர்வாக (அல்லது) 1.5 லட்சம் கிமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகின்றது. இந்த நீண்ட கால உத்தரவாதம் புதிய கார்களுக்கு மட்டுமின்றி பழைய வாகனங்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது. அதாவது, இந்த அதிகபட்ச கால உத்தரவாதத்தை கட்டணத்தின் அடிப்படையிலேயே ஃபோர்டு வழங்க இருக்கின்றது. அதுவும், அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

ஃபிகோ, ஃப்ரீ ஸ்டைல், அஸ்பையர், ஈகோ ஸ்போர்ட் மற்றும் என்டீயோவர் ஆகிய மாடல்களுக்கே புதிய நீண்ட கால உத்தரவாதம் பொருந்தும். மக்கள் மத்தியில் தனது தயாரிப்புகளின்மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்த நீண்ட கால உத்தரவாதத்தை ஃபோர்டு அறிவித்திருக்கின்றது. மேலும், இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

இந்த நீண்ட கால உத்தரவாத திட்டத்துடன் ரோட்-சைட் அசிஸ்டண்ட் சிறப்பு சேவையையும் கூடுதலாக வழங்கப்பட இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. இந்த நீண்ட கால உத்தரவாதத்தை மூன்று விதமான பேக்கேஜ்களில் ஃபோர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 4 வருடங்கள், 5 வருடங்கள் மற்றும் 6 வருடங்கள் என மூன்று விதமான பேக்கேஜ்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இவையனைத்திற்குமே பொதுவாக 1.5 லட்சம் கிமீ வாரண்டி வழங்கப்பட இருக்கின்றது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

வாகனங்களின் வயதை வைத்தே அதற்கான கட்டணம் மற்றும் திட்டத்தை ஃபோர்டு வழங்குகின்றது. அதாவது, 90 நாட்கள், 91 முதல் 365 நாட்கள் மற்றும் 1 முதல் 3 வருடங்கள் என மூன்று விதமான ஃபிரேம்களின் அடிப்படையில் கார்களுக்கான மதீப்பீடு போடப்படுகின்றது. இதை வைத்தே அனைத்து விதமான கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும். இதுகுறித்த முழுமையான தகவலைக் கீழே காணலாம்.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல்:

இந்த மூன்று மாடல்களுக்குமான திட்டமும் ஒரே மாதிரியான காட்சியளிக்கின்றன. இதில், பெட்ரோல் மாடல்களுக்கான நீண்ட கால உத்தரவாதம் பற்றிய தகவலை முதலில் பார்க்கலாம். பெட்ரோல் வேரியண்டிற்கான நான்கு வருடங்கள் கூடுதல் வாரண்டிக்கு ரூ. 8,933 முதல் ரூ. 11,533 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐந்து வருடங்களுக்கு ரூ.11,341 மற்றும் ரூ. 14,441 என்ற கட்டணமும், ஆறு வருடங்களுக்கு ரூ. 17,289 மற்றும் ரூ. 22,289 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

டீசல் வேரியண்டிற்கான கட்டணத்தைத் தொடர்ந்து பார்க்கலாம். 4 வருடங்களுக்கு ரூ. 10,033 மற்றும் ரூ. 12,933 என்ற கட்டணமும், 5 வருடங்களுக்கு ரூ. 14,541 மற்றும் ரூ. 18,641 என்ற கட்டணமும், 6 வருடங்களுக்கு ரூ. 23,589 மற்றும் ரூ. 30,589 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்:

இந்தியாவின் மிக பிரபலமான எஸ்யூவி கார்களில் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரும் ஒன்று. அண்மையில்தான் இக்காரை பிஎஸ்6 தரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் வேரியண்டின் நான்கு வருடங்களுக்கு ரூ. 10,524 மற்றும் ரூ. 13,624 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

இதேபோன்று, 5 வருடங்களுக்கு ரூ. 16,066 மற்றும் ரூ. 20,766 என்ற கட்டணமும், 6 வருடங்களுக்கு ரூ. 30,089 மற்றும் ரூ. 39,189 என்ற தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் வேரியண்ட், 4 வருடங்களுக்கு ரூ. 13,524 - ரூ. 17,624ம், 5 வருடங்களுக்கு ரூ. 20,066 - ரூ. 26,066 மற்றும் 6 வருடங்களுக்கு ரூ. 33,089 - ரூ. 43,089 என்ற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி... நீண்ட கால வாரண்டியை வழங்கும் ஃபோர்டு... பழைய கார்களுக்கும் பொருந்தும்!!

ஃபோர்டு என்டீயோவர்:

ஃபோர்டு எண்டீயோவர் என்பது நாட்டில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் எஸ்யூவி காராகும். இக்கார் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காருக்கும் 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மற்றும் 6 ஆண்டுகள் என்ற கூட்டப்பட்ட உத்தரவாதத்தை வழங்க இருக்கின்றது. இதற்கான கட்டணமாக ரூ. 30,133 முதல் ரூ. 1,25,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Announces New Extended Warranty In India: Up To 6 Years Of Coverage. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X