Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாக்கும்போதே அட்டகாசமா இருக்கு! கவர்ச்சியான காராக மாறிய ஈகோஸ்போர்ட்... கண்களுக்கு விருந்தளிக்கும் படம் உள்ளே!!
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரொன்று முழுமையான கவர்ச்சி மிகுந்த வாகனமாக மாறியுள்ளது. இதன் கண்கவர் படங்களைக் கீழே காணலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஈகோஸ்போர்டு மாடலும் ஒன்று. இது பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். இந்தியர்களின் பிடித்தமான காராக இது இருக்கின்றது. இக்காரையே இளைஞர்கள் சிலர் பிரத்யேக தோற்றத்திற்கு மாடிஃபிகேஷன் வாயிலாக மாற்றியிருக்கின்றனர். இதனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஈகோஸ்போர்ட் கார்களைக் காட்டிலும் இது மிகவும் கவர்ச்சியான காராக மாறியிருக்கின்றது.

கார் முழுவதிற்கும் கொடுக்கப்பட்டுள்ள அடர் கருப்பு நிறமே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. வெளி மற்றும் உட்புற தோற்றம் அனைத்திற்குமே கருப்பு நிறத்தை மட்டுமே மாடிஃபை குழுவினர் வழங்கியிருக்கின்றனர். அதேசமயம், முகப்பு பகுதியில் இருக்கும் பம்பர் மற்றும் மேற்கூரையில் இருக்கும் ரெயில்களுக்கு மட்டும் சில்வர் நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

காரின் கவர்ச்சியை மேலும் மெருகேற்றும் வகையில் இந்த நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கார் பற்றிய புகைப்படங்களை அக்ஷே அணில் 93 எனும் இன்ஸ்டா பயனர் வெளியிட்டிருக்கின்றார். அவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படங்களும் காரை விரும்பாதவர்களைக் கூட விரும்பச் செய்யும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, மிகவும் சாதுவான தோற்றம் கொண்ட ஈகோஸ்போர்ட் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு அப்கிரேட் ஆகியிருக்கின்றது. இதுவே இக்கார் பலரின் கவனத்தைப் பெற காரணமாக அமைந்துள்ளது. இந்த முரட்டுத்தனமான தோற்றத்திற்காக பல்வேறு உடல்கூறு மாற்றத்தை இக்கார் பெற்றிருக்கின்றது.

இதன்படி, ரேப்டர் ஸ்டைலிலான கிரில், எல்இடி மின் விளக்குகள், ஸ்கிட் பிளேட், சிவப்பு நிற பொய்யான டோவிங் கொக்கி உள்ளிட்ட பல்வேறு அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, புதிதாக கருப்பு நிற அலாய் வீல், சிவப்பு நிற காலிபர் மற்றும் பாஷ் நிறுவனத்தின் செராமிக் பிரேக் பேட் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

புதிய மாடிஃபிகேஷன் கூறுகளால் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் 'பிளாக் பேந்தர்' எனும் பட்டப் பெயரைப் பெற்றிருக்கின்றது. ஆமாங்க இணையவாசிகள் பலர் இக்காரை இப்படிதான் செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த ஒட்டுமொத்த மாடிஃபிகேஷனுக்கும் ரூ. 1.70 லட்சம் செலவானதாக மாடிஃபிகேஷன் குழு தெரிவித்துள்ளது.

இந்த தொகையைக் கொண்டு வெறும் வெளி மற்றும் உட்புறத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், இதன் எஞ்ஜினில் எந்த மாற்றத்தையும் ஈகோஸ்போர்ட் பெறவில்லை. ஆகையால், 1.5லிட்டர் டீசல் எஞ்ஜினே காரில் காணப்படுகின்றது. இது 2017ம் ஆண்டு மாடலாகும். தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் ஈகோஸ்போர்ட் கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட்டு வருகின்றது. அவை பிஎஸ்6 தரத்திலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.