ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்-6 மாடலுக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவும் ரகசியமாக துவங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாடலில் இடம்பெற இருக்கும் புதிய எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு மிக நேரடி போட்டியாளராக ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இருந்து வருகிறது. டிசைன், எஞ்சின் தேர்வுகள், தொழில்நுட்ப அம்சங்களில் மிகச் சிறந்த தேர்வாக மதிக்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 160 பிஎஸ் டார்க் திறனையும், 385 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 200 பிஎஸ் பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை மேம்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், ஃபோர்டு நிறுவனம் தற்போது வழங்கப்படும் இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகளையும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்த விரும்பவில்லை.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

மாறாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினை எண்டெவர் எஸ்யூவியில் வழங்க முடிவு செய்துள்ளது. அத்துடன், இந்த எஞ்சினுடன் புதிய 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், விலையை மிகச் சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பு கிட்டும். ஆனால், ஃபோர்டு நிறுவனம் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கொண்டு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read: 5மிகப்பெரிய அப்டேட்டுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்.. என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் வழங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read: ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி கார் ரூ.29.2 லட்சம் முதல் ரூ.34.7 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் புதிய மாடலின் விலை ரூ.2 லட்சம் வரை அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Most Read: இந்திய சாலைகளில் நடக்கும் உச்சகட்ட காமெடிகள்! (பி.கு - சிரித்து வயிறு புண் ஆனால் கம்பெனி பொறுப்பல்ல)

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்-6 மாடலுக்கு டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் மூலமாக கசிந்த தகவல் தெரிவிக்கிறது. ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு!

அடுத்த மாதம் இறுதியில் அல்லது வரும் மார்ச் துவக்கத்தில் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக தொடர்ந்து தக்கவைக்கும் அம்சங்களுடன் எதிர்பார்க்கலாம்.

Source: Team BHP

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to report, Ford is planning to launch Endeavour with 2.0l BS-6 compliant diesel engine in India very soon.
Story first published: Friday, January 31, 2020, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X