முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

உலகளவில் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற பிரபலமான முழு-எஸ்யூவி மாடலாக விளங்கும் ஃபோர்டு எண்டேவியர் அதன் ஆஃப்-ரோடு பண்பை மேம்படுத்தும் வகையில் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜியல்க்ரேஷன்ஸ் அபிசியல் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மாடிஃபைடு செய்யப்பட்ட ஃபோர்டு எண்டேவியர் கார் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த மாடிஃபைடு வாகனத்திற்கு ‘இடும்பன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

இதன் முன்புறத்தில் பார்த்தோமேயானால், ஸ்டாக் ஹெட்லேம்பிற்கு மாற்றாக சந்தைக்கு பிறகான ஹெட்லேம்ப் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு கீழே எல்இடி தரத்தில் டிஆர்எல்கள் உள்ளன. இவற்றுடன் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக ராப்டர் எக்ஸ் சீரிஸ் பாடி கிட்டை உரிமையாளர் பொருத்தியுள்ளார்.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

இந்த தொகுப்பில் ஒன்றாக உள்ள பம்பருக்கு அடியில் பெரிய அளவில் சறுக்கல் தட்டு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பிற மாற்றங்களாக புதிய க்ரில் அமைப்பு, ஃபோர்டு முத்திரையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு எண்டேவியர் காரில் வழக்கமாக வழங்கப்படும் க்ரோம் பாகங்கள் அனைத்தும் இந்த மாடிஃபைடு காரில் நீக்கப்பட்டுள்ளன.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

அகானா கார்பன் வழிகாட்டியில் இருந்து கார்பன் ஃபைபர் ஹூட்டை இந்த கார் பெற்றுள்ளது. இந்த ஹூட்டில் இரு விளக்குகளும், மேற்கூரையின் மீது ஹம்மர் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டில் 8 இன்ச்சில் ஃபெண்டரை இந்த எண்டேவியர் கார் பெற்றுள்ளது.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கக்கூடிய பாகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மாடிஃபைடு காரில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சமாக 12 நிலைகளில் அட்ஜெஸ்ட் ஆகும் நைட்ரோஜன் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதுதான் காரின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கும்.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

சக்கரங்களும் ஃப்யூல் அம்புஷ் நிறுவனத்தின் பளபளப்பான கருப்பு நிற அலாய் சக்கரங்களினால் மாற்றப்பட்டுள்ளன. இந்த அலாய் சக்கரங்களில் மண் நிலப்பரப்பிற்கு ஏற்ற டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டயர்களுக்கு இடையில் உள்ள பக்கவாட்டு படிக்கட்டு உபயோகத்தில் இல்லாத போது தானாக மடித்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

பின்புறத்திலும் சந்தைக்கு பிறகான எதிரொலிப்பு விளக்குகள் பம்பருக்கும் அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் வழங்கப்படும் எண்டேவியர் முத்திரை நீக்கப்பட்டு எவரெஸ்ட் என்ற முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்த எஸ்யூவி காரை சர்வதேச சந்தைகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் தான் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

மற்றப்படி என்ஜின் அமைப்புகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் 3.2 லிட்டர் 5-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தான் இந்த மாடிஃபைடு வாகனத்திலும் தொடர்ந்துள்ளது. இதன் உடன் இணைக்கப்பட்டுள்ள 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.

முரட்டுத்தனமான தோற்றத்தில் ஃபோர்டு எண்டேவியர்... தமிழர்களின் ரசனைக்கு இதுவே உதாரணம்...

இத்தகைய மாடிஃபைடு மாற்றங்கள் அனைத்திற்கும் உட்படுத்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த ஃபோர்டு எண்டேவியர் கார் என்பது நம்பர் ப்ளேட்டை பார்த்தவுடன் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் மாடிஃபைடு பணிகளை மேற்கொண்டது, கேரளா, கொல்லத்தை சேர்ந்த ஆட்டோபக்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனமாகும்.

Most Read Articles

English summary
Meet ‘IDUMBAN’ – India’s first 7 inch lifted Ford Endeavour with wild modifications [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X