வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

ஃபோர்டு எண்டேவியரில் புதியதாக ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த ஸ்பெஷல் எடிசன் ஃபோர்டு டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் வந்தடைந்துள்ளது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

ஸ்போர்ட் என்ற பெயரில் விற்பனையை துவங்கவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் முன்னதாக சில நாட்களுக்கு முன்பு கூட குஜராத் ஷோரூம் ஒன்றில் அடையாளம் காணப்பட்டு இருந்தது. இதில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் கார் டீலர்களுக்கு பிரித்து கொடுக்கும் பணி துவங்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

இதனால் மிக விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் தற்போது மோட்டர்பீம் செய்திதளம் மூலமாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எண்டேவியருக்கு விற்பனையில் போட்டியாகவுள்ள டொயோட்டா ஃபார்ச்சூனரின் டிஆர்டி ஸ்போர்டிவோ எடிசன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

அதில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் தவிர்த்து சில கூடுதல் வசதிகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் ஃபோர்டு நிறுவனம் எண்டேவியர் புதிய ஸ்போர்ட் எடிசனில் வெறும் காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டும் தான் வழங்கியுள்ளது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

இந்த புதிய எடிசனில் நாம் பார்த்தவுடனே கவனிக்கும் விஷயமாக புதிய டிசைனில் கருப்பு நிறத்தில் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக எண்டேவியரில் செங்குத்தாக சொருக்கப்பட்ட ஸ்லாட்களுடன் காட்சியளிக்கும் இதன் க்ரில், இந்த ஸ்பெஷல் எடிசனில் தேன்கூடு வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

ஸ்பெஷல் எடிசன் என்பதை காட்டும் விதமாக காரை சுற்றிலும் ‘ஸ்போர்ட்' முத்திரை பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்கவாட்டில் உள்ள முத்திரைகள் கூட கருப்பு நிறத்தில் உள்ளது. மற்றப்படி காரின் உட்புற படங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

ஆனால் எப்படியிருந்தாலும் வழக்கமான எண்டேவியரின் இரட்டை நிற கேபினுக்கு பதிலாக முழுவதும் ஒரே விதமாக கருப்பு நிறத்தில் கேபின் வழங்கப்படும். அதேபோல் லெதர் இருக்கைகளிலும் ஸ்போர்ட் முத்திரையை பார்க்க முடியும். ஆனால் இவை தவிர்த்து வேறெந்த கூடுதல் வசதியையும் எண்டேவியரின் இந்த ஸ்பெஷல் எடிசனில் எதிர்பார்க்க முடியாது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

இதனால் எண்டேவியரில் ஃபோர்டு நிறுவனம் வழங்கிவரும் 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், செமி-ஆட்டோ இணை பார்க்கிங் உதவி மற்றும் ஃபோர்டின் இணைப்பு தொழிற்நுட்பமான ஃபோர்டு பாஸ் உள்ளிட்டவை புதிய ஸ்பெஷல் எடிசனிலும் தொடரவுள்ளன. -

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

அதேபோல் வழக்கமான 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டர்போ டீசல் என்ஜினையும் எண்டேவியர் ஸ்போர்ட் எடிசன் தொடரவுள்ளது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

வேகமாக விற்பனைக்கு தயாராகும் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசன்...

மேலும் 4x2 மற்றும் 4x4 ட்ரைவ்ட்ரையினும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு எவரெஸ்ட்டின் ஸ்போர்ட் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எண்டேவியரின் ஸ்போர்ட் எடிசனின் விலை எண்டேவியரின் டாப் டைட்டானியம் ப்ளஸ் ட்ரிம்-ஐ காட்டிலும் ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் விற்பனை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

எண்டேவியரின் விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.29.99 லட்சத்தில் இருந்து ரூ.34.45 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour Sport Black and Standard variant – Spied together
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X