கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

கவர்ச்சிகரமான அம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி வகை மார்க்கெட்டில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சந்தையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் வருகையின் மூலமாக சந்தைப் போட்டி மிக கடுமையாக மாற இருக்கிறது. தவிரவும், அண்மையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் டிஆர்டி மாடலும் அறிமுகமானது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இதனை மனதில் வைத்தும், பண்டிகை காலத்தில் புதிய பிரிமீயம் எஸ்யூவி வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலும் எண்டெவர் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலானது பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வந்துள்ளது. அப்சொலூயூட் பிளாக், டிஃபியூஸ்டு சில்வர் மற்றும் டைமண்ட் ஒயிட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்போர்ட் மாடல் கிடைக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

அதிக கவர்ச்சியை தரும் வகையில், கருப்பு வண்ணத்திலான பல பாகங்கள் வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட் மாடலில் கருப்பு பின்னணியுடன் எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், க்ரோம் வில்லைகளுடன் கூடிய முன்புற க்ரில் அமைப்பு, பம்பர்கள், அலாய் வீல்கள், ரியர் வியூ மிரர்கள், ரூஃப் ரெயில்கள், முன்புற ஃபென்டர் பேட்ஜ், சைடு ஸ்டெப்புகள், ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பின்புற கதவில் ஸ்போர்ட் என்ற ஸ்டிக்கர் அலங்கரிக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

எண்டெவர் எஸ்யூவியின் டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் வந்துள்ளது. இதில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபோர்டு சிங்க்-3 தொழில்நுட்ப வசதி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, பனோரமிக் சன்ரூஃப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 4 வீல் டிரைவ் சிஸ்டம், டிராக்ஷன் மோடுகள், டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஆஃப்ரோடு பயன்பாட்டு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரூ.35.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது சாதாரண எண்டெவர் வேரியண்ட்டுகளில் இருந்து அதிக தனித்துவமாகவும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் அதிக மதிப்பையும் வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 22, 2020, 13:20 [IST]
English summary
Ford has launched new Endeavour Sport variant in India and priced at Rs.35.10 lakh (Ex-Showroom).
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+