கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட்... டீசர் வெளியீடு!

அதிக சிறப்பம்சங்களுடன் வர இருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

ஃபுல் சைஸ் எனப்படும் பிரம்மாண்ட எஸ்யூவி ரக சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. இதுவரை டொயோட்டா ஃபார்ச்சூனர், அதைவிட்டால் ஃபோர்டு எண்டெவர் என்ற நிலை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய மாடல்களும் சிறந்த மாற்றுத் தேர்வுகளாக உள்ளன. அதேபோன்று, எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியும் இந்த சந்தையில் களமிறங்க உள்ளது.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

இந்த சூழலை மனதில் வைத்து டொயோட்டா நிறுவனம் அண்மையில் ஃபார்ச்சூனர் டிஆர்டி என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலை கொண்டு வந்தது. இதே பாணியில் தற்போது ஃபோர்டு நிறுவனமும் தனது எண்டெவர் எஸ்யூவியில் புதிய மாடலை களமிறக்க உள்ளது.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தோற்றத்தை அதிக கவர்ச்சியுடன் காட்டுவதற்கான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் சேர்க்கப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, பம்பர்கள், கருப்பு வண்ண அலாய் வீல்கள், விசேஷமான ஸ்போர்ட் பேட்ஜ், டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடையே எண்டெவர் பெயருடன் கூடிய கருப்பு வண்ண ஸ்டிக்கர் பட்டை ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

பக்கவாட்டில் சைடு ஸ்டெப்புகள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள் ஆகியவற்றுடன் உட்புறத்திலும் விசேஷ பேட்ஜ் மற்றும் சில அலங்கார விஷயங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

எஞ்சின் தேர்வில் எந்த மாற்றங்களும் இருக்காது. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஸ்போர்ட் மாடலின் டீசர் வெளியீடு!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி ரூ.29.99 லட்சம் முதல் ரூ.34.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஸ்போர்ட் மாடலுக்கு ரூ.50,000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has released Endeavour Sport SUV first teaser ahead of it's launch in India.
Story first published: Wednesday, September 16, 2020, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X