ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த அம்சங்களுடன் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக ஃபோர்டு ஃபிகோ வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், ஃபிகோ காரின் மதிப்பை கூட்டும் முயற்சிகளில் ஃபோர்டு ஈடுபட்டுள்ளது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

கடந்த ஆண்டு ஃபோர்டு ஃபிகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக சிறப்பம்சங்களுடன் இந்த மாடல் வந்தது. இந்த நிலையில், ஃபோர்டு ஃபிகோ பிஎஸ்6 மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

இந்த சூழலில், தற்போது ஃபோர்டு ஃபிகோ காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அதாவது, ஃபோர்டு ஃபிகோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில்தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஃபோர்டு ஃபிகோ காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 96 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. இதன் ரக மாடல்களில் மிகச் சிறப்பான செயல்திறனை வழங்கும் மாடலாகவும் இருக்கிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பையும், சிறப்பானதாகவும் மாறும்.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் வழங்கப்படும் அதே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ்தான் ஃபோர்டு ஃபிகோ காரிலும் வழங்கப்பட உள்ளது. இந்த கியர்பாக்ஸ் செயல்திறன் மிக சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, பேடில் ஷிஃப்ட் வசதியுடன் இந்த மாடல் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலானது வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

ஏற்கனவே 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் எஞ்சினில் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிஎஸ்6 விதிகளால் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

 ஃபோர்டு ஃபிகோ காரில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலானது வசீகரமான முகப்பு க்ரில் அமைப்பு, சி வடிவிலான பனி விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் புதுப்பொலிவுடன் வந்தது. தற்போது பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுடன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது நிச்சயம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறும்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to report, Ford is planning to launch automatic gearbox option on Figo petorl model by next month.
Story first published: Monday, July 20, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X