ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இந்திய சந்தையில் பிரபலமான ஃபோர்டு எண்டேவியரில் சில வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார்ஸில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 7 இருக்கை கொண்ட எஸ்யூவி மாடல் எண்டேவியர்.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

3 விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கும் இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35.11 லட்சம் வரையில் உள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த எஸ்யூவி காரில் சில வசதிகள் வேரியண்ட்களை பொறுத்து நீக்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இதுகுறித்து டீம்பிஎச்பி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள விபரங்களில் எண்டேவியரில் பின் இருக்கை பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அக்ஸலெரி ஹீட்டர் அனைத்து வேரியண்ட்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

அதேபோல் ஆரம்ப நிலை 4x2 டைட்டானியம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களிலும் முன்பக்க கதவு அருகில் வழங்கப்படும் இரும்பு ஸ்கஃப் தட்டுகள் மற்றும் கீழ்-தரப்பட்ட 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் நீக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இவற்றுடன் எண்டேவியரில் வழங்கப்பட்டுவரும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் நீக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது இயக்கத்தின்போது என்ஜின் உள்பட காரின் மற்ற பாகங்கள் உராய்வதால் உண்டாகும் இரைச்சலை கேபினுக்குள் வரவிடாமல் தடுக்கும்.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இந்த வசதி உள்பட மேற்கூறப்பட்ட வசதிகள் அனைத்தும் இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து எண்டேவியரில் வழங்கப்பட போவதில்லை. வழக்கமான வேரியண்ட்களுடன் ஸ்போர்ட் என்ற பெயரில் ஃபோர்டு எண்டேவியரின் ஸ்பெஷல் எடிசனும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இதன் விலை ரூ.35.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் ஒரே 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜின் வழங்கப்படுகின்றது. இந்த டீசல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன், பிராண்டின் ‘செலக்ட்-ஷிஃப்ட்' தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. அதுவே டாப் வேரியண்ட்களில் கூடுதல் தேர்வாக 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டேவியர் காரில் இருந்து சில வசதிகள் நீக்கம்!! அய்யய்யோ.. இதெல்லாம் போச்சா?

ஃபோர்டின் தரமான தயாரிப்புகளுள் ஒன்று எண்டேவியர். இவ்வாறான தயாரிப்பில் இருந்து தற்போது சில வசதிகள் நீக்கப்பட்டிருப்பது நிச்சயம் காரின் செயல்திறனை எதாவது ஒரு வழியில் பாதிக்கதான் செய்யும். குறிப்பாக ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி பயண அனுபவத்தை சிறிது சீர்க்குலைக்கதான் செய்யும்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour Features Removed: Here Are The Variant-Wise Details
Story first published: Thursday, December 24, 2020, 22:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X