மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

ஃபோர்டு நிறுவனத்தின் கார் ஒன்று மோதல் பரிசோதனையில் சொதப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபல கார் மாடல் ஒன்று லத்தீன் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய மோதல் பரிசோதனையில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபோர்டு கேஏ ப்ளஸ் (Ford Ka+) காரே விபத்து பரிசோதனையில் மண்ணைக் கவ்விய வாகனம் ஆகும்.

மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

லத்தீன் அமெரிக்காவிற்காக பிரேசில் நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட கார் இதுவாகும். இக்கார் இந்தியாவில் ஃபோர்டு ஃபிகோ அஸ்பயர் எனும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்த காருக்கும் தற்போது விபத்து பரிசோதனையில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கும் கேஏ ப்ளஸ் காருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

அதாவது, இந்தியாவிற்கான ஃபோர்டு ஃபிகோ அஸ்பயர் கார்கள் இந்தியாவிலேயே வைத்தே தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம், இந்த கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றவை ஆகும். ஆகையால், கேஏ ப்ளஸ் மாடலைக் காட்டிலும் இந்தியாவிற்கான கார்கள் கணிசமான பாதுகாப்பு திறன்களைக் கொண்ட காராக இருக்கின்றது.

மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

லத்தீன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள்:

முக்கிய காரின் முன்பக்கத்தில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு சிறிதளவும் பாதுகாப்பில்லா சூழலே இக்காரில் நிலவுகின்றது. குறிப்பாக, டிரைவர் மற்றும் சக முன் பக்க பயணிகள் விபத்தின்போது கடும் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். இதையே தற்போதைய சோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மோதல் பரிசோதனையில் சொதப்பிய ஃபோர்டு கார்... இவ்ளோ தரம் குறைந்த காரா இது..? மிரள வைக்கும் தகவல்!

பிரேசில் மேட் ஃபோர்டு கேஏ ப்ளஸ் காரில் பாதுகாப்பு வசதிக்காக இரு ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அம்சம் பெரியளவில் பாதுகாப்பை முன்பக்க பயணிகளுக்கு வழங்கவில்லை. இதன் விளைவாக பூஜ்ஜியம் ஸ்டார்களை இது பெற்றிருக்கின்றது. இது பிரேசில் வாசிகள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஃபிகோ அஸ்பயர் காரைக் காட்டிலும் சற்று நீளமான காராக லத்தீன் அமெரிக்காவில் இக்கார் விற்கப்பட்டு வருகின்றது. விலையைக் கருத்தில் இக்காரில் இஎஸ்சி வசதி வழங்கவில்லை. இந்த வசதி வழங்கப்பட்டால் காரின் விலை அதிகரித்து விடும் என்ற காரணத்தினால் இதனை ஃபோர்டு தவிர்த்திருக்கின்றது. இதுபோன்ற சிலவற்றின் காரணத்தினாலும் இக்கார் பாதுகாப்பு திறனைப் பெற தவறியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Ka+ scores 0 Star Rating In Latin NCAP Crash Test. Read In Tamil.
Story first published: Wednesday, December 9, 2020, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X