Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிற்கு வருகிறதா ரேஞ்சர் ராப்டர்? இந்த வாகனம் இருந்தால் போதும், எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்!
ஃபோர்டு ரேஞ்சர் ராப்டர் இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரேஞ்சர் ராப்டர் ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவியை போன்று தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்த அவ்வளவு சரியானதாக இருக்காது. ஏனெனில் இது கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கென வடிவமைக்கப்பட்ட பிக்-அப் ட்ரக் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இல்லாவிடினும், ஆஃப்-ரோடு திறன்கள், அதிக சுமையை சுமக்கும் திறன் மற்றும் ரேஸ்-ட்ரக் போன்ற திறன்களை கொண்ட ட்ரக்குகளுக்கு போட்டியாக ரேஞ்சர் ராப்டர் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அதுவுமில்லாமல் மஹிந்திராவுடன் ஃபோர்டு ஏற்படுத்தி கொண்டுள்ள கூட்டணியினால் நம் நாட்டில் இந்த ஆஃப்-ரோடு வாகனம் விற்பனைக்கு வர இதுவே சரியான தருணமாக இருக்கும். வழக்கமான பிக்-அப் ட்ரக் வாகனங்கள் அதிக சுமைகளை சுமக்கக்கூடியவைகளாக மட்டுமே இருக்கும்.

ஆனால் ஏணி-ஃப்ரேம் அடிப்பீடத்தினால் (சேசிஸ்) இந்த ஃபோர்டு தயாரிப்பு மற்ற வாகனங்களை இழுத்து செல்வதற்கும், சுமைகளை வைத்து கொண்டு குதித்தலின்போதும் சிறப்பாக செயல்படும். பின்பக்கத்தில் சுமைகளை வைப்பதற்காக முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு வலிமையான ராப்டரில் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் ரேஸ் ட்ரக்குகளுக்கு புகழ்பெற்ற ஃபாக்ஸின் 2.5 இன்ச் ஆஃப்-ரோடு ரேசிங் காயில்ஓவர்களையும் ரேஞ்சர் ராப்டர் பெறுகிறது. இதன் விளைவாக பள்ளங்கள் நிறைந்த பகுதிகளில் வாகனம் சில வினாடிகள் பறப்பது எளிதாகிறது.

ரேஞ்சர் ராப்டரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 283மிமீ ஆகும். இந்த வாகனத்தை 800மிமீ ஆழ நீரில் எந்தவொரு பயமுமின்றி இயக்கி செல்லலாம். அதேபோல் சுமார் 285மிமீ அகலத்தில் டயர்களை பெறுவதினால் வாகனத்தின் ட்ராக்ஷன் கண்ட்ரோல் அதிகமாகவே உள்ளது.

ஃபோர்டு எண்டேவியரில் வழங்கப்படும் என்ஜின் அமைப்புதான் ரேஞ்சர் ராப்டரில் வழங்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் கூடுதலாக இரட்டை டர்போகள் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் வழங்கப்படுவதால், இதை அதிகப்பட்சமாக 213எச்பி மற்றும் 500என்எம் டார்க் திறன் என்ற என்ஜின் ஆற்றலில் இயக்க முடியும்.

எண்டேவியரின் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த வாகனத்திற்கு தொடரப்படுகிறது. கூடுதலாக பாதை நிர்வாக அமைப்புடன் 6-மோட்களை கொண்ட 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் ராப்டரில் வழங்கப்படுகிறது. மொத்த தோற்றத்தில் எண்டேவியர் போன்ற ஃபோர்டு எஸ்யூவி கார்களை காட்டிலும் இந்த ஆஃப்-ரோடர் அகலமானதாக இருக்கும்.

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் இறக்குமதி சலுகையை பயன்படுத்தும் வகையில் 2500-யூனிட் ஒத்திசைவு-இல்லா முறையில் ரேஞ்சர் ராப்டரை இந்தியாவில் இறக்குமதி செய்யவுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள இந்த வாகனத்தின் விலை எப்படியிருந்தாலும் ரூ.70 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்படும்.