ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு!

செயல்திறன் மிக்க ஃபோகஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

இந்தியர்களின் பார்வை பிரிமீயம் கார் மாடல்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனை மனதில் வைத்து, இதுவரை இந்தியர்களுக்கு காட்டாத பல புதிய பிரிமீயம் வகை கார் மாடல்களை இந்தியா கொண்டு வர இருக்கிறது ஃபோர்டு கார் நிறுவனம்.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

அந்த வகையில், தனது ரேஞ்சர் ராப்டர் என்ற அசத்தலான பிரிமீயம் வகை பிக்கப் டிரக் மாடலை இந்தியாவில் கொண்டு வர ஃபோர்டு முடிவு செய்துள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட இந்த பிக்கப் டிரக் மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

இந்த தகவல் வெளியான உடனே, அடுத்து ஒரு நல்ல செய்தியையும் ஃபோர்டு இந்தியா நிறுவனத்திடம் இருந்து கசிந்துள்ளது. அதாவது, ஃபோகஸ் என்ற பிரிமீயம் வகை ஹேட்ச்பேக் கார் மாடலையும் இந்தியாவில் கொண்டு வர ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக ஓவர்டிரைவ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

ஃபோகஸ் மட்டுமின்றி, அதன் செயல்திறன் மிக்க ஃபோகஸ் எஸ்டி என்ற மாடலையும் இந்தியாவில் களமிறக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது. ரேஞ்சர் ராப்டர், ஃபோகஸ், ஃபோகஸ் எஸ்டி ஆகிய மூன்று மாடல்களும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

கடந்த 2018ம் ஆண்டில் நான்காம் தலைமுறை மாடலாக ஃபோர்டு ஃபோகஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்த கார் 4,361 மிமீ நீளமும், 2,649 மிமீ வீல் பேஸ் நீளமும் பெற்றிருக்கிறது. இதில் இருந்தே இந்த கார் எவ்வளவு பிரம்மாண்டமான ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

ஃபோர்டு ஃபோகஸ் காரில் 125 பிஎஸ் பவரை வழங்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 160 பிஎஸ் பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம். ஃபோர்டு ஃபோகஸ் எஸ்டி காரில் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் உள்ளது. இந்த எஞ்சின் 280 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

ஃபோர்டு ஃபோகஸ் காரில் 16 அங்குல சக்கரமும், ஃபோகஸ் எஸ்டி காரில் 19 அங்குல சக்கரங்களும் பொருத்ப்பட்டு இருக்கும். சாதாரண ஃபோகஸ் காரை விட அதிக ஆக்சஸெரீகள் மற்றும் வலுவான சஸ்பென்ஷன் அமைப்புடன் ஃபோகஸ் எஸ்டி காரர் வர இருக்கிறது. ஃபோர்டு ஃபோகஸ் எஸ்டி காருக்கு ரூ.45 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபோகஸ் ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஃபோர்டு?

ரேஞ்சர் ராப்டர், ஃபோகஸ், ஃபோகஸ் எஸ்டி கார் மாடல்கள் விற்பனை எண்ணிக்கை அடிப்படையிலான மாடல்களாக களமிறக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. அதாவது, வாடிக்கையாளர்களை தன் பிராண்டு மீதான கவனத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த புதிய மாடல்களை ஃபோர்டு களமிறக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து பல புதிய மாடல்களையும் களமிறக்க ஃபோர்டு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to report, Ford is planning to launch Focus and Focus ST premium hatchback models in India.
Story first published: Monday, December 14, 2020, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X