டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்..

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் இவி வாகனங்களுக்கான மின்கலங்களை (பேட்டரிகள்) சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

 டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்...

உலகளவில் பெரும்பான்மையான கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் எலக்ட்ரிக் கார் திட்டங்களில் தீவிரமாக பயணியாற்றி வருகின்றன. ஏனெனில் எலக்ட்ரிக் தான் எதிர்கால போக்குவரத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் என கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கணித்து வைத்துள்ளன.

 டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்...

இந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது. இதனை ஃபோர்டு நிறுவனத்தின் சிஇஒ ஜிம் ஃபார்லே உலகின் முன்னணி ஆங்கில செய்தி தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்...

டெஸ்லா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களை பின்பற்றி சொந்தமாக பல பாகங்களை கொண்ட (காம்ப்ளஸ்) பேட்டரிகள் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படவுள்ளன. ஆனால் ஃபோர்டின் முன்னாள் சிஇஒ ஜிம் ஹேக்கெட் வேறு மாதிரியான கருத்தை பதிவு செய்திருந்தார்.

 டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்...

அதாவது மூன்றாம் தரப்பு சப்ளையாளர்களிடம் பேட்டரிகளை வாங்குவதற்கு பதிலாக அவற்றை சொந்தமாக தயாரிப்பது நிறுவனம் எந்த நன்மையையும் அளிக்காது என கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார். பேட்டரிகளின் திறனை அதிகரிக்க மூன்றாம் தரப்பு சப்ளையாளர்களிடம் நிறைய நெகிழ்வுத்தன்மை இல்லை என தற்போது ஃபோர்டு கருதுகிறது.

 டெஸ்லாவை பின்பற்றி அதிரடி முடிவை எடுக்க இருக்கும் ஃபோர்டு!! முன்னாள் சிஇஒ முடியாதுனு விட்ட காரியம்...

2025ஆம் ஆண்டிற்குள்ளாக அறிமுகப்பட இருக்கும் ஃபோர்டின் புதிய தலைமுறை வாகனங்களுக்கு முன்னதாக இந்நிறுவனம் பேட்டரிகளை சொந்தமாக தயாரிப்பது குறித்து ஆராய்வது உண்மையில் நல்ல காரியமாகவே தென்படுகிறது. ஏனெனில் இந்த நடவடிக்கை ஃபோர்டின் புதிய எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford plans to manufacture batteries for its electric vehicles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X