டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

தற்போதைக்கு இந்தியாவில் விற்பனையில் இல்லாத ஃபோர்டு ரேஞ்சர் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

ஸ்டைலிஷான தோற்ற கொண்ட வாகனங்களுக்கான சந்தை, இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாக உள்ளது. இதனால் தான் இஸுஸு நிறுவனம் அதன் லைஃப் ஸ்டைல் பிக்அப் ட்ரக்கான டி-மேக்ஸ் வி-க்ராஸை தைரியமாக இந்தியாவில் சந்தைப்படுத்தி வருகிறது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

அதற்கேற்றாற்போல் டி-மேக்ஸ் வி-க்ராஸ் ட்ரக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால், மஹிந்திரா நிறுவனமும் அதன் தார் மாடலை பழமையான தோற்றத்தில் இருந்து மாடர்ன் தோற்றத்திற்கு மாற்றியமைத்துள்ளது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

இந்த நிலையில் தான் ஃபோர்டு ரேஞ்சரின் சோதனை மாதிரி கார் ஒன்று இந்திய சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரேஞ்சரின் இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களை காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ளது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் பெரும்பான்மையானவற்றை ஃபோர்டு ரேஞ்சர், ஃபோர்டு நிறுவனத்தின் எவரெஸ்ட் எஸ்யூவியில் இருந்து தான் பெற்றுள்ளது. எவரெஸ்ட் எஸ்யூவி, இந்தியாவில் எண்டேவியர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

இதன் காரணமாக முழுக்க முழுக்க ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற விதத்தில் உருவாகும் ரேஞ்சரில் தேவைக்கு டார்க் உடன் ஆக்டிவ் ட்ரான்ஸ்ஃபர் கேஸ், 4 ட்ரைவிங் மோட்கள் உடன் நிலப்பரப்பு மேலான்மை அமைப்பு, வேறுபாடுகளுடன் வாகனத்தை பூட்டுதல், மலை ஏறுவதற்கான உதவி, மலை தொடர்களுக்கான கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், குறை-ரோல்ஓவர் உள்ளிட்ட என்டேவியர் மாடலின் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

இவை மட்டுமின்றி என்ஜின் அமைப்பையும் ரேஞ்சர், எண்டேவியரில் இருந்து பெற்றுள்ளது. இந்த வகையில் சர்வதேச சந்தையில் இந்த ஃபோர்டு மாடலில் பொருத்தப்படுகின்ற 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தான் இதன் இந்திய வெர்சனில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

அதிகப்பட்சமாக 167 பிஎச்பி மற்ரும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. பின்புறத்தில் பொருட்களை ஏற்றுவதற்கு தேவையான இடவசதியுடன் வடிவமைக்கப்படுவதால் ஃபோர்டு ரேஞ்சர் வழக்கமாகவே இரு இருக்கைகளை மட்டுமே பெறுகிறது.

டொயோட்டா ஹைலக்ஸிற்கு போட்டியாக... ஃபோர்டு ரேஞ்சர் இந்தியாவில் சோதனை...

இதன் உட்புற கேபின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிற்நுட்பங்களுடன் மட்டுமே தயாரிக்கப்படுவதால் ரேஞ்சரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் மலிவானதாக ஃபோர்டு நிறுவனம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனத்தை பற்றிய மற்ற தகவல்களை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கிய போட்டி மாடலாக டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்அப் ட்ரக்கை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுவருகிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Ranger Spied In India, Could Potentially Rival Upcoming Toyota Hilux
Story first published: Monday, August 24, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X