அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் காரின் புதிய தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.35.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த எஸ்யூவி காரை விளம்பரப்படுத்தும் நோக்கில் டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், அலுத்துபோன தினசரி வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள்; உங்களது அட்வென்ஜெர் பக்கத்தை பாருங்கள் என்ற கருத்தை வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு இந்தியா நிறுவனம் கூற வந்துள்ளது. இந்த கருத்து நிச்சயம் கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தற்சமயம் தேவைப்படும் ஒன்றாகும்.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

ஏனெனில் நாம் அனைவரும் நீண்ட நாட்களாக தினசரி ஒரே மாதிரியான வேலையை செய்து அலுத்துபோய் உள்ளோம் என்பது உண்மைதானே. தோற்றத்தில் மொத்த காரும் கவர்ச்சிக்கரமான கருப்பு நிறத்தில் இருந்தாலும், க்ரில் அமைப்பை எபோனி கருப்பு நிறத்தில் இந்த ஸ்போர்ட் எடிசன் பெற்றுள்ளது.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இந்த எபோனி கருப்பு நிறம் அலாய் சக்கரங்களுக்கும் மேற்கூரை ரெயில்களுக்கும் தொடரப்பட்டுள்ளது. மற்றப்படி ஃபெண்டர்களில் க்ரோம் மானிகர்கள் மற்றும் சில்வர் நிற சறுக்கு தட்டுகள் உள்ளிட்டவை அனைத்தும் கருப்பு நிறத்தில்தான் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன் ஃபோர்டு எண்டேவியர் பெயர்பலகையை கூட இந்த கார் கருப்பு நிறத்தில்தான் பெற்றுள்ளது.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

ஸ்போர்ட் முத்திரைகள் பின் கதவு உள்பட சில கதவுகளில் வழங்கப்பட்டுள்ளன. எபோனி கருப்பு நிறத்தில் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடியை பெற்றுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஸ்மோக்டு ஹெட்லேம்ப்கள், கருப்பு நிற ஃபெண்டர் க்ரில் மற்றும் கருப்பு நிற உள்ளீடுகளுடன் பக்கவாட்டு படிக்கட்டு உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இத்தகைய காஸ்மெட்டிக் அப்கிரேட்களை தவிர்த்து புதிய தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இந்த ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்படவில்லை. இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஃபோர்டு எண்டேவியரின் டாப் லைன் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழு காற்றுப்பைகள், இஎஸ்சி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை கண்டறியும் மானிடர், மலை தொடர்ச்சி பகுதிகளுக்கான கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை ஸ்போர்ட் எடிசனில் பெறலாம்.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இவை மட்டுமில்லாமல் மிக பெரியளவில் பனோராமிக் சன்ரூஃப், முன் & பின் பார்க்கிங் சென்சார்கள், இரு நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல் அமைப்பு, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், ஆப்பிள் கார்ப்ளே & கூகுள் ஆட்டோவுடன் இணைக்ககூடிய 8.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இயந்திர பாகங்களின் இரைச்சல் சத்தத்தை தவிர்க்கும் வசதி மற்றும் ஃபோர்டு பாஸ் இணைப்பு தொகுப்பு உள்ளிட்டவற்றையும் எண்டேவியர் ஸ்போர்ட் எடிசன் கார் உடன் வாங்கலாம்.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

டாப் வேரியண்ட் என்பதால் கை-சைகை இல்லா பார்க்கிங், க்ரூஸ் கண்ட்ரோல், கை-சைகை இல்லா பின் கதவு செயல்பாடு, ஃபோர்டின் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தையும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் பெறுகிறது. எண்டேவியரின் வழக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தான் எண்டேவியர் ஸ்போர்ட் எடிசனிலும் கொடுக்கப்படுகிறது.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற ஒற்றை ட்ரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை இந்திய சந்தையில் பெறும் முதல் காராக ஃபோர்டு எண்டேவியர் விளங்குகிறது.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

இதனுடன் 4X4 ட்ரைவ் சிஸ்டம் நிலையாக வழங்கப்படும் இந்த காரில் சாலைக்கு ஏற்றாற்போல் நார்மல், பனி/சேறு/புற்கள், மணல் மற்றும் ராக் என்ற மோட்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் 800மிமீ ஆழமுடைய நீர் நிலைகளுக்கு உள்ளேயும் இந்த எஸ்யூவி வாகனத்தை இயக்க முடியும்.

அட்வென்ஜெர் பயணங்களுக்கு அழைக்கும் ஃபோர்டு எண்டேவியர் ஸ்போர்ட் கார்... புதிய டிவிசி வீடியோ வெளியீடு

ஃபோர்டு எண்டேவியருக்கு விற்பனையில் போட்டியாக மஹிந்திரா அல்டுராஸ், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி க்ளாஸ்டர் உள்ளிட்டவை விளங்குகின்றன. இருப்பினும் இந்த ஃபோர்டு எஸ்யூவி கார் இந்திய சந்தையில் பிரபலமான வாகனமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Endeavour Sport TVC released
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X