ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் சில முக்கிய வசதிகள் திடீரென நீக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சிறந்த மாற்றுத் தேர்வாகவும் வாடிக்கையாளர் மனதில் பதிந்துவிட்டது.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

ஆஜானுபாகுவான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும் மாடலாகவும் இருந்து வருகிறது.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

இந்த நிலையில், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் சில முக்கிய வசதிகள் நீக்கப்பட்டுள்ளதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

கார் எஞ்சின் சப்தத்தை குறைத்து சிறப்பான ஓலி தரத்தை வழங்கும் ஆக்டிவ் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி அனைத்து வேரியண்ட்டுகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையில் ஹீட்டர் வசதியானது டைட்டானியம் ப்ளஸ் மற்றும் ஸ்போர்ட் ஆகிய வேரியண்ட்டுகளில் நீக்கப்பட்டுள்ளது.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

அதேபோன்று, டைட்டானியம் 2 வீல் டிரைவ் வேரியண்ட்டிலிருந்து முன்புற வாயில்களுக்கான ஸ்டீல் ஸ்கஃப் பிளேட் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 10 ஸ்பீக்கர்களிலிருந்து 8 ஸ்பீக்கர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

மேலும், 2 வீல் டிரைவ் வேரியண்ட்டுகளில் ஒற்றை வண்ண அலாய் வீல்கள் மட்டுமே வழங்கப்பட உள்ளன. MAJAXXMRWALT00001 என்ற வின் நம்பருக்கு பின்னர் உற்பத்தி செய்யப்படும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் முக்கிய வசதிகள் திடீரென நீக்கம்!

எம்ஜி க்ளோஸ்ட்டர், விரைவில் வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் அதிக வசதிகள் கொடுக்கப்படும் நிலையில், இருக்கும் வசதிகளையும் ஃபோர்டு நீக்கி இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has removed some notable features from Endeavour SUV in India.
Story first published: Monday, December 28, 2020, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X