மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

உலக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஃபோர்டு நிறுவனம் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

உலக மக்கள் அனைவரையும் ஒற்றை வைரஸ் கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த வைரசின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக இதுவரை கையாளாத மாஸ்க், சானிட்டைசர் மற்றும் சமூக இடைவெளி என பல யுக்திகளைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர் இந்தியர்.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

இந்த நிலையில் இந்த யுக்திகளை மட்டுமே கையாண்டால் போதுமானதாக இருக்காது என்றும், நம்மை சுற்றியிருக்கும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சில சுகாதார அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இதில், நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வாகனங்கள் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

இந்நிலையில், கண்களுக்கே தெரியாத வைரசை அழிப்பது எப்படி என்பது பற்றிய தகவலை பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு வெளியிட்டுள்ளது. அது அறிவித்த 10 முக்கிய குறிப்புகளைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஃபோர்டு நிறுவனம் குறிப்பாக 10 முக்கிய இடங்களை அறிவித்து, அதில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு கூறியிருக்கின்றது.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

பொதுவாகனத்தை நாமாகவே சானிட்டைஸ் (கிருமி நாசினி) செய்யும்போது வாகனத்தின் வெளிப்புறத்திற்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றோம். அதாவது, சோப்பு அல்லது கிருமி நாசினி மருந்துகளைக் கொண்டு வாகனங்களின் வெளிப்புறத்தை மட்டுமே தூய்மைச் செய்கின்றோம். இது வாகனத்தின் மேற்புறத்தில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

ஆனால் காரின் கேபினுக்குள் இது சற்று பலனளிக்காது எனவேதான் குறிப்பிட்ட 10 இடங்களை மட்டும் மிக அதிக கவனத்துடன் சானிட்டைஸ் செய்ய வேண்டும் என்கிறது ஃபோர்டு. அதில், மிக முக்கியமானதாக ஸ்டியரிங் வீல் இருக்கின்றது. ஸ்டியரிங் வீல் பலரின் கைகளை தழுவும் ஓர் பகுதியாக இருப்பதால் இதில் பல்வேறு விதமான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

அதேசமயம், இதைவிட முக்கியமாக அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியதாக வாகனங்களின் சாவி இருக்கின்றது. வாகனங்களைப் பயன்படுத்தும் அதன் சாவியை எப்போதும் நமது கைகளிலேயோ அல்லது பாக்கெட்டுகளிலேயே மட்டுமே வைத்திருப்பது இல்லை. இதனை சில நேரங்களில் கீழே தவரவிடலாம் அல்லது குறிப்பிட்ட மேசை, அலமாரி அல்லது சாவி மாட்டும் இடங்கள் ஆகியவற்றில் வைக்க நேரிடலாம்.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

இந்த இடங்கள் தூய்மையானதாகதான் இருக்கும் என நம்மால் உறுதியாக கூறிவிட முடியாது. எனவே, மிக முக்கியமாக சானிட்டைஸ் செய்ய வேண்டியதில் சாவிகள் முக்கிய இடத்தில் இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, மற்ற அம்சங்கள் இருக்கின்றன.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

இதன்படி, ஃபோர்டு நிறுவனம் இரண்டாவதாக குறிப்பிடும் இடத்தில் கார்களின் உள் மற்றும் வெளிப்புற ஹேண்டில் பார்கள் இருக்கின்றன. இதையடுத்து மூன்றாவது இடத்தில் சீட் பெல்டுகள் இருக்கின்றது. இவையிரண்டும்கூட காரின் உரிமையாளர் அல்லாத நபர்களும் பயன்படுத்தும் ஓர் கருவியாக இருக்கின்றது. எனவேதான் காரை சானிட்டைஸ் செய்யும்போது இதன்மீது தனிக்கவனம் செலுத்த ஃபோர்டு வற்புறுத்துகின்றது.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

நான்காவது இடத்தில் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் இருக்கின்றது. நாம் வெளியில் சென்றுவிட்டு மீண்டு காருக்கு திரும்பும்போது ஏதேனும் கிருமியால் பாதிக்கப்பட்ட இடத்தைத் தொட நேர்ந்திருக்கலாம். அதே விரல்களோடு மீண்டும் இந்த புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தானையும் பயன்படுத்த நேரிடும். எனவே, இங்கும் சற்று கூடுதல் சானிட்டைசிங் கவனம் தேவைப்படுகின்றது.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

இதையடுத்து, ஐந்தாவது இடத்தில் ரியர் வியூ மிர்ரரும், ஆறாவது இடத்தில் தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏழாவது இடத்தில் கியர் ஸ்டிக்குகள் இருக்கின்றன. கிருமி தொற்றைப் பெற்ற அதே கைகள் மற்றும் விரல்களால் இவையும் பயன்படுத்தப்படுமேயானால் அவையும் கிருமி பரப்பும் பணியாளராக மாறிவிடும். எனவேதான் ஃபோர்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் இந்த பாகங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

கடைசி இடத்தில் பார்க்கிங் பிரேக் மற்றும் ஹெட்லைட் க்னாப், சிக்னல் மற்றும் வைப்பர் லிவர்கள் இருக்கின்றன. இவையும் கிருமி தொற்றை எளிதில் ஏற்பவை என்பதால் சானிட்டைசிங்கின்போது அதிக கவனம் செலுத்த வேண்டியவையாக இது இருக்கின்றது.

அதேசமயம், மேற்கூறிய 10 தனித்துவமான இடங்களை சுத்தம் செய்யும்போது தனித்துவமான கவனம் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள்.

மிக தீவிரமாக பரவும் வைரஸ்! மக்களை காப்பாற்ற முக்கியமான டிப்ஸ்களை வழங்கிய ஃபோர்டு... என்னனு தெரியுமா?

ஏனெனில் மேற்கூறியவற்றில் பல எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளாக இருப்பதால் தண்ணீர் போன்ற திரவம் அதில் பட்டால் எளிதாக பழுதாக நேரிடலாம். எனவே, கிருமி நாசினிகளை துணி அல்லது சிறிய துண்டு போன்றவற்றில் தெளித்த பின்னர் அழுத்தி துடைத்து எடுக்கலாம். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறைச் செய்வதன்மூலம் கிருமிகளும் அழியும், அந்த எலெக்ட்ரானிக் கருவியையும் பாதுகாக்க முடியும்.

ஃபோர்டு நிறுவனத்தைப் போலவே சமீபத்தில் டாடா நிறுவனமும் இதுபோன்ற சிறப்பு டிஸ்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. அது காரையும், அதன் உரிமையாளரையும் கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் வழிமுறைகளை கூறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதை அறிவுரையைதான் நாட்டின் பல வாகனம் சார்ந்த நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Shared Video For Which Part Of The Car Require Frequent Sanitization. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X