'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு நிறுவன அதிகாரி

பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரி சூசகமாகக் கலாய்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்ன கூறினார் என்பதைக் கீழே காணலாம்.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்கள் மிக விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றன. இதனை அந்நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் மற்றுமொரு உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, டெஸ்லா நிறுவனத்தை புதிய கருத்தின் மூலம் சீண்டியிருக்கின்றது.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

அண்மையில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரின் மேற்கூரை தானாக காற்றில் அடித்துச் சென்றது. எந்தவொரு விபத்தையும் சந்திக்காதநிலையில் கார் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகியது.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

இதனால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறி வரும் டெஸ்லாவிற்கு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியது. மேலும், பிற நிறுவனங்களின் கிண்டலுக்கும் ஆளாகியது. இம்மாதிரியான சூழ்நிலையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்டு, "எங்கள் காரின் மேற்கூரை காற்றில் பறந்து செல்லாது" என சூசகமாக டெஸ்லாவைக் கிண்டலடித்திருக்கின்றது.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

இந்த பதிவு டெஸ்லாவைக் கிண்லடிக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளது. ஆகையால், இது டெஸ்லா பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், டெஸ்லா காரின் மேற்கூரை காற்றில் அடித்துச் சென்ற சம்பவத்தை அனைவரும் மறந்திருந்தவேலையில் மீண்டும் நினைவூட்டுகின்ற வகையில் இக்கருத்தை ஃபோர்டு வெளியிட்டிருக்கின்றது.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

ஃபோர்டு நிறுவனம் தனது புதிய மின்சார தயாரிப்பான மேக்-இ (Mach-E) காருக்கு விளம்பரம் தேடி தரும் வகையில் இந்த கருத்தை ஃபோர்டு வெளியிட்டிருக்கின்றது. அண்மையில் இக்கார்குறித்து பேசிய ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, எங்களின் இந்த தயாரிப்பு அதிக பாதுகாப்பானது. இதில் இருந்து எந்த பாகமும் கழண்டு விழாது. குறிப்பாக மேற்கூரை காற்றில் அடித்து செல்லாது" என கூறியிருந்தார்.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் கடந்த காலங்களில் டெஸ்லா மின்சார காரின் உரிமையாளர்கள் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கூரை பிய்த்து சென்றது. கதவுகள் திறக்கமுடியாமல் இறுகியது, பம்பர் தானாக கழண்டு விழுந்தது என பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க், கார்களை அதிக உறுதியுடன் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

இந்த நிலையிலேயே ஃபோர்டு நிறுவனம், டெஸ்லாவை சூசகமாகக் கலாய்த்திருக்கின்றது. ஃபோர்டு மேக்-இ என்பது அந்நிறுவனத்தின் புதுமுக மின்சார காராகும். மிக சமீபத்திலேயே இக்காரை ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் $42,895 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப விலை மட்டுமே ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 31,49,736 ஆகும். இது தோராயமான மதிப்பு.

'ரொம்ப உறுதியானது, காற்றில் அடித்து செல்லாது' -பிரபல நிறுவனத்தின் காரை பங்கமாக கலாய்த்த ஃபோர்டு!

இந்த மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 300 மைல்கள் வரை பயணிக்க முடியுமாம். அதாவது, 480க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Official Teases Tesla: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, December 29, 2020, 14:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X