எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த வருடத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் க்ளோஸ்டர் எஸ்யூவி தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, எம்ஜியின் இந்த புதிய எஸ்யூவி கார், கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டிருந்த தோற்றத்தில் தான் கிட்டத்தட்ட காட்சியளிக்கிறது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

7-இருக்கை வெர்சனான க்ளோஸ்டர் எஸ்யூவி வெளிப்புறத்தில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கிடைமட்டமான எல்இடி டெயில்லைட்ஸை பெற்றுள்ளது. இவற்றுடன் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்தில் சக்கர ஆர்ச், உயரமான பில்லர்கள், க்ரோம்டு விண்டோ லைன் உள்ளிட்டவையும் இந்த எஸ்யூவி மாடலில் உள்ளன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

பின்புறத்தில் ஸ்டாப் விளக்குடன் ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாய்லரை கொண்டுள்ள இந்த கார் பளபளப்பான கருப்பு நிறத்தில் டிஃப்யூஸர் மற்றும் வட்ட வடிவில் குரோமியத்தால் ஆன க்வாட் எக்ஸாஸ்ட் பைப்களை பக்கவாட்டு டிஃப்யூஸருக்கு இணையாக பெற்றுள்ளது.

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ளோஸ்டர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை எம்ஜி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினானது அதிகப்பட்சமாக 224 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி 2.0 லிட்டர் பை-டர்போ எஃப்சிஏ டீசல் என்ஜின் தேர்விலும் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

217 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த டீசல் என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் 4-வீல்-ட்ரைவ் சிஸ்டம் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

எம்ஜி க்ளோஸ்டரில் முக்கியமான வசதிகளாக 12.3 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8-இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, மூன்று நிலைகளில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூடுதல் சவுகரியமான முன்புற இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

கடந்த மாத ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷோரூம்களுக்கு இந்த தீபாவளி பண்டிக்கை காலத்தில் சென்றடையவுள்ள இந்த கார் எம்ஜியின் மற்ற அனைத்து மாடல்களை விடவும் அதிகமாக ரூ.50 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலையை பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

இந்த புதிய எஸ்யூவி காரின் நீளம் 5,005மிமீ, அகலம் 1,932மிமீ, உயரம் 1,875மிமீ, வீல்பேஸ் 2,950மிமீ மற்றும் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 210மிமீ ஆகும். இவ்வாறு அதிகப்படியான பரிமாண அளவுகளினால் க்ளோஸ்டர் எஸ்யூவி, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், இசுஸு எம்யூ-எக்ஸ் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல்

மேலும் இந்த கார் ஆஃப்-ரோட்டிற்கான அமைப்புகளையும் பெற்றுள்ளதால் மோசமான பாதைகளில் டேங்க்லிங் செல்லும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேக்ஸஸ் டி60 மாடலின் கட்டமைப்பு முறையில் உருவாக்கப்பட்டு வருகின்ற க்ளோஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுகத்திற்கு பிறகு எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் இசட்எஸ் இவி மாடல்களின் விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team BHP

Most Read Articles
English summary
Upcoming MG Gloster SUV (Fortuner Rival) Spied With Quad Exhaust System
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X