விற்பனைக்கே வராது என நினைத்த காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... அதவிட இது சூப்பரோ சூப்பர்..!

இப்போதைக்கு இந்த கார் விற்பனைக்கு வராது என நினைக்கப்பட்ட ஃபன்ஸ்டர் மின்சார கார் மாடலில் மற்றுமொரு காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், முதல் முறையாக அதன் பரவலைத் தொடங்கிய அந்த நேரத்தில் உலக நாடுகள் பல தங்களை பொது முடக்கத்திற்குள் தள்ள இருப்பதாக அறிவித்தன. ஆனால், வைரஸ் அச்சம் துளியளவும் இல்லாமல், எப்போதும்போல் செயல்பட்டது இந்தியா. குறிப்பாக, 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவை தங்கு தடையில்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

அதேவேலையில், உலகின் பல முக்கிய வாகன கண்காட்சிகள் வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் பல புதுமுக வாகனங்களின் அறிமுகத்துடன் ஆட்டோ எக்ஸ்போ கோலாகளமாக நடைபெற்றது. இதில், சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால உற்பத்தி வாகனங்களை கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தின.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

அந்தவகையில் அறிமுகமான முன் மாதிரி கார்களில், மஹிந்திரா நிறுவனத்தின் ஃபன்ஸ்டர் மின்சார வாகனமும் ஒன்றாகும். மிக அதிக திறன் கொண்ட மின்சார காராக இது இருந்ததால் அநேகரின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்த மின்சார கார் 230kW (308 hp) திறன் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டது.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

எனவே, ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்ற பலரை இந்த கார் வெகுவாக கவர்ந்தது. மேலும், இதன் அறிமுகம் பலர் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர். ஆனால், இக்காரை உற்பத்தி செய்வதற்கான எண்ணம் இப்போதைக்கு இல்லை என மஹிந்திரா கைவிரித்தது.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

இந்த நிலையில், மஹிந்திரா ஃபன்ஸ்டர் கான்செப்ட் காரை மற்றொரு காரில் மறைத்து வைத்தவாறு மஹிந்திரா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்திரா டபிள்யூ 601 என்ற புனைப்பெயரில் உருவாகி வரும் இந்த மாடலில்தான் ஃபன்ஸ்டர் மறைந்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈஷா பரிக் எனும் நபர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்திருக்கின்றன.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

மஹிந்திரா ஃபன்ஸ்டர் ஓர் இரட்டை மோட்டார்களைக் கொண்ட அனைத்து வீல்களும் இயங்கும் திறனுடைய மின்சார காராகும். இது, அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஓடும் திறனைக் கொண்டதாகும். மேலும், ஒரு முழுமையான சார்ஜில் 520 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டது. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருந்த காரணத்தினால்தான் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

ஆனால், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக உற்பத்தி நடவடிக்கையை மஹிந்திரா ஒத்தி வைத்திருக்கின்றது. இம்மாதிரியான சுழ்நிலையிலேயே ஃபன்ஸ்டரின் பல்வேறு அம்சங்களுடன் மஹிந்திரா டபிள்யூ601 கார் உருவாக்கப்பட்டு வருவதாக குஷிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைக்கப்பட்ட உருவத்துடன் இந்த காரை சாலையில் பல பரீட்சையில் ஈடுபடுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகியிருக்கின்றன.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

மஹிந்திரா டபிள்யூ601 என்ற புனைப் பெயரில் காட்சியளித்திருக்கும் இக்கார் எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை மாடல் என்றும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2021ம் ஆண்டில் விற்பனைக்கு வரவிருக்கும் எக்ஸ்யூவி500 மாடல்தான் தற்போது ஃபன்ஸ்டர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

ஃபன்ஸ்டர் காரில் இடம்பெற்றிருந்த அதே ஸ்லீக் வடிவிலான எல்இடி மின் விளக்குகளே 2021 மஹிந்திரா எக்ஸ்யூவிலும் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று, ஃபன்ஸ்டரின் முகப்பு லேசாக அப்படியே புதிய எக்ஸ்யூவில் காட்சியளிக்கின்றது. எனவேதான், இந்த காரை ஃபன்ஸ்டரின் பிம்பம் என இணையவாசிகள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

மேலும், அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் இந்த காரில் ஹைபிரிட் அம்சமும் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கேற்ப பல அட்டகாசமான அணிகலன்களையே 2021 எக்ஸ்யூவி 500 கார் தற்போது பெற்றிருக்கின்றது. இதையே கேமிராவின் கண்களில் சிக்கிய கார்குறித்த புகைப்படங்களும் உறுதி செய்கின்றன. இதுகுறித்து எலெக்ட்ரிக் வெஹிக்கிள் வெப் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மேலும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் 2.0 லிட்டர் எம்ஸ்டால்லியன் டி-ஜிடிஐ டர்போசார்ஜட், டைரக்ட் இன்ஜெக்சன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் எம்-ஹாக் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இவையிரண்டும் ஹைபிரிட் தரத்தில் கிடைக்க இருக்கின்றன.

விற்பனைக்கே வராது என நினைக்கப்பட்ட காரை வேறு வழியில் களமிறக்கும் மஹிந்திரா... இது அதைவிட சூப்பரா இருக்கு...

சிஏஎஃப்இ மற்றும் ஆர்டிஇ ஆகிய விதிகளுக்கு உட்பட்டு இவை தயார் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மஹிந்திரா விரைவில் மின்சாரம் சார்ந்த வாகனங்களை களமிறக்க இருக்கின்றது. இதன் முன்னோட்டமாகவே ஹைபிரிட் வாகன தயாரிப்பில் அது களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே அந்நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கும்நிலையில் இந்த கார் தற்போது வெளியாகி பலர் வியக்கை வைத்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Mahindra Funster EV Concept Hiding In The New 2021 XUV500. Read in Tamil.
Story first published: Thursday, October 1, 2020, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X