Just In
- 54 min ago
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago
201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!
- 1 hr ago
இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்!
- 2 hrs ago
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
Don't Miss!
- News
ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை
- Movies
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- Finance
வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.!
- Sports
கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி
- Lifestyle
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏன்மா இதெல்லாம் ஒரு வீலாமா! இத போட்டா வண்டி எப்படிமா ஓடும்! விநோத மாடிஃபிகேஷனில் ஜிஎம்டி சைரா..!
உலக நாடுகளில் மிகவும் பிரபலமான மாடலாக வளம் வந்துக் கொண்டிருக்கும் ஜிஎம்சி சைரா 1500 மாடல் டிரக்கிற்கு இளைஞர்கள் சிலர் 20 அடி உயரமுள்ள ராட்சத வீலைச் சேர்த்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

வாகன மாடிஃபிகேஷன் உலகமே மிரண்டு போகக் கூடிய வகையில் இளைஞர் ஒருவர் தனது காரின் வீல்களை மாற்றியமைத்துள்ளார். ஆம், தனது கார்களில் பொருத்தப்பட்டிருந்த வழக்கமான வீல்களை நீக்கிவிட்டு, அதற்கு 20 அடி நீளமுள்ள (240 அங்குலம்) மர சக்கரங்களை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் இதற்கு முன்னர் வாகன மாடிஃபிகேஷன்குறித்த பல்வேறு தகவல்களை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். அவற்றைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட மாடிஃபிகேஷனாக தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.

விஸ்லின் டீசல் (WhistlinDiesel) எனும் யுடியூப் சேனலை நடத்தி வரும் குழுவே இந்த விநோதமான மாடிஃபிகேஷனை செய்திருக்கின்றன. லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டு இயங்கும் இந்த யுடியூப் பிக்-அப் ட்ரக்குகளைச் சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே 20 அடி நீளம் உள்ள மரத்தால் தயாரிக்கப்பட்ட வீல்களை ஜிஎம்சி சைரா 1500 மாடல் ட்ரக்கில் பயன்படுத்தியிருக்கின்றனர்.
முன்னதாக ஃபோர்டு எஃப்-250 மாடல் மேற்கொண்ட 10 அடி நீள வீல் சாதனையை முறியடிக்கும் விதமாகவே இந்த புதிய சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதேசமயம், இந்த யுடியூப் வாசிகள் பொழுதுபோக்கிற்காகவே இந்த மாடிஃபிகேஷனை செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சரி, அந்த சாதனையில் அவர்கள் வெற்றிப் பெற்றார்களா? உண்மையைக் கூற வேண்டுமானால் யுடியூப் வாசிகளின் இந்த முயற்சி படு தோல்வியைச் சந்தித்திருக்கின்றது.

ஆம், 20 அடி நீளமுடைய ராட்சத வீலுடன் கம்பீரமாக காட்சியளித்த டிரக் முன்னேறி நகர்வதில் பெரும் சிக்கலைச் சந்தித்தது. இருப்பினும், அக்காரை இயக்கிய இளைஞர் தொடர்ச்சியாக ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், வீலோ சட்டைக்கூட செய்யாமல் அப்படியே உறைந்தபடியே இருந்தது.

அதேசமயம், பதிலுக்கு அந்த இளைஞர் தொடர் இயங்கு விசையை கொடுத்துக் கொண்ட இருந்தார். ஒரு கட்டத்தில் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், வீல்களுக்கு இயக்கத்தைக் கடத்தும் உலோக உருளை உடைந்து நொறுங்கியது.
இதன் பின்னர் நிச்சயம் ட்ரக் இயங்காது என்பதை உணர்ந்த அந்த குழு, மற்றுமொரு ட்ரக்கை வைத்து ராட்சத மர வீலைக் கொண்ட ட்ரக்கினை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால், அதிலும் அது தோல்வியையேச் சந்தித்தது. ஆம், ஆரம்பத்தில் நகர்வதைப் போல் பாவனைக் காட்டிய அந்த வீல்கள், அதிக எடை மற்றும் இழு திறனை தாங்க முடியாமல் உடைந்து நொறுங்கியது. இதில், காரின் பல பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. இந்த படு தோல்விக்கு வீல் ஒழுங்கற்ற முயற்சியில் தயாரிக்கப்பட்டதே முக்கிய காரணமாக உள்ளது.

ட்ரக்கின் எடையைக் கணக்கிடாமலும், ஒழுங்கான உருளை வடிவத்தைக் கொடுக்காமல் இருந்ததுமே இந்த தோல்விக்கு முதன் காரணங்களாக அமைந்துள்ளன.
இதுமட்டுமின்றி அவர் தேர்ந்தெடுத்த கரடு, முரடான பாதையும் மற்றுமொரு காரணமாக அமைந்திருக்கின்றது. இருப்பினும், இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஒரு சிலர் பாராட்டையும், ஒரு சிலர் பல்வேறு கேள்விகளையும் முன் வைத்து வருகின்றனர்.

யுடியூப் வாசிகள் இந்த மாடிஃபிகேஷனுக்காக வீல்களைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், ஜிஎம்சி சைரா ட்ரக்கில் என்ன மாதிரியான எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றதோ, அதே எஞ்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதில் வீல்கள் மட்டும் நீக்கப்பட்டு, ராட்சத மர வீலை தாங்குகின்ற வகையில் உலோக உருளை ரிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதன் மூலமே மர வீல்களை அவர்கள் ட்ரக்கோடு இணைத்தனர். இதற்காக புல்டோசர் வாகனத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இத்துடன், பல அடி உயரத்தில் நின்றுக் கொண்டிருந்த அக்காரில் ஏற மற்றும் இறங்க, ட்ரக்கின் அடிப்பகுதியிலேயே மேடைப் போன்ற அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.