டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

விலையுயர்ந்த கேமிராவை இளைஞர் ஒருவர் காரின் டயருக்குள் பொருத்தி விநோத முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ந்து பார்க்கலாம்.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

வாகனத்தைப் பற்றியும், வாகனத்தைச் சார்ந்தும் இணையத்தில் பல்வேறு தகவல்களும், வீடியோக்களும் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வாறு சிறப்பு வாய்ந்த மற்றும் கவனத்தை ஈர்க்கக் கூடிய பல்வேறு தகவல்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிடுவதில் தவறியதில்லை. அந்தவகையில், யுட்யூப் சேனல் வாயிலாக வெளியாகியிருக்கும் விநோதமான வீடியோ பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

ஆம், நாம் தலைப்பில் கொடுத்துள்ளதைப் போலவே டயருக்குள் 'கோ ப்ரோ' எனும் விலையுயர்ந்த நவீன கேமிராவை இளைஞர் ஒருவர் பொருத்தியிருக்கின்றார். மேலும், கேமிராப் பொருத்தப்பட்ட டயரை ஆடம்பர கார்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி இ55 காரில் பொருத்தி, அதனை சாலையில் வைத்தும் இயக்கியும் இருக்கின்றனர்.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

இந்த விநோத செயலை, கார் சாலையில் செல்லும்போது டயர்கள் எந்த மாதிரியான சூழ்நிலைகளை எல்லாம் சந்திக்கின்றது என்பது பற்றி ஆராயும் விதமாக செய்யப்பட்டுள்ளது. பிரபல யுட்யூப் சேனல்களில் ஒன்றான வார்பட் பெர்செப்சன் (Warped Perception) எனும் சேனலே இதனை மேற்கொண்டிருக்கின்றது. அதுகுறித்த வீடியோவையும் அந்த சேனலின் வாயிலாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

முதலில் கோ ப்ரோ கேமிராவைப் பற்றிய ஒரு சில முக்கிய தகவல்களைப் பார்த்துவிடலாம். 21ம் நூற்றாண்டின், கேமிரா உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஓர் மாடலே இந்த 'கோ ப்ரோ' கேமிராக்கள். இந்த கேமிரா 4கே முதல் மிகவும் குறைந்த தர வீடியோக்களைக்கூட பதிவு செய்யும். இதுமட்டுமின்றி மெதுவான வீடியோ, டைம் லேப்ஸ், அதிக இணைப்பு வசதி என பல்வேறு அம்சங்களையும் இக்கேமிராக் கொண்டிருக்கின்றது.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

எனவேதான் கேமிரா ஆர்வலர்கள் மத்தியில் கோ ப்ரோ அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த அதி நவீன கேமிராவை, டயரின் இயக்கம்குறித்து ஆய்வு மேற்கொள்ளும் விதமாக செடான் ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரில் யுட்யூப் சேனல் குழு பயன்படுத்தியிருக்கின்றது. இந்த யுட்யூப் சேனல் இதுபோன்று முற்றிலும் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவிடுவதில் பெயர்போன சேனலாக உள்ளது.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

எனவேதான் கோடிக்கான பார்வையாளர்கள் இந்த சேனலுக்கு இருக்கின்றனர். மேலும், இந்த வீடியோ வெளியாகிய ஒரு வாரத்திலேயே ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த வீடியோவில், வீலில் எப்படி கேமிரா பொருத்தப்படுகின்றது என்பதுகுறித்த காட்சியே முதலில் இடம்பெறுகின்றது.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

இதைத்தொடர்ந்தே அக்கார் சாலையில் செல்லும்போது, டயருக்குள் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வருகின்றது. இதன் பின் வரும் காட்சிகளை வார்த்தையால் விவரிப்பதைவிட வீடியோவாக பார்ப்பதே மிகச் சிறப்பாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். ஆகையால், இதுகுறித்த வீடியோவை உங்கள் பார்வைக்காக கீழே வைத்திருக்கின்றோம்.

சக்கரத்தில் கேமிரா பொருத்தப்பட்ட பிறகு அதற்கு தேவையான மின்சார வசதி யுஎஸ்பி மூலம் கொடுக்கப்படுகின்றது. அதுவும், வீலுக்குள்ளேயே பொருத்தப்படுகின்றது. தொடர்ந்து, அந்த பவர் பேங்க் மற்றும் கேமிரா பாதுகாப்பாக இருக்கும் விதமாக அதற்கு பாதுகாப்பு வசதி அமைக்கப்படுகின்றது.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

இதைத்தொடர்ந்து, அந்த ரிம்மில் டயர் இணைக்கப்பட்டு சாலையில் இயக்கப்படுகின்றது. அது சாலையில் இயங்கும் காட்சி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. உண்மையில் டயர்கள் சாலையில் என்ன மாதிரியான இடர்களை சந்திக்கின்றன, அவை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் வகையில் அந்த காட்சிகள் அமைந்திருக்கின்றன.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

ஒவ்வொரு முறையும் டயர் தரையுடன் தொடர்பு கொள்ளும்போது அதிக அழுத்தத்தைச் சந்திப்பதை நம்மால் உணர முடிகின்றது. இந்த வீலில் காற்று குறைவாக இருந்த காரணத்தினாலயே வழக்கமான அழுத்தத்தைவிட கூடுதல் அழுத்ததைச் அது சந்தித்துள்ளது. கேமிராவின் முழு செயல்பாட்டையும் அறிந்துக்கொள்ளும் விதமாகவே யுட்யூப் சேனல் குழுவினர் குறைந்தபட்ச காற்றை அந்த டயரில் நிரப்பியிருக்கின்றனர்.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

இதுபோன்ற ஆய்வுகள் ஆபத்தானவை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பவர் பேங்குகள் வெடிக்கும் திறன் கொண்டவை ஆகும். அதிலும், அது முழு சார்ஜில் இருக்கும் அது அழுத்தத்தம் அல்லது வேறு விதமான சீண்டல்களைச் சந்திக்கும் வெடி பொருளை வெடிச் சிதறக் கூடும்.

டயருக்குள் விலையுயர்ந்த கேமிராவை பொருத்திய நபர்... விநோத முயற்சி... எதற்காக தெரியுமா..? வீடியோ!

ஆகையால், கார் போன்ற வாகனங்களில் இதுபோன்ற வீண் விபரீத செயலை மேற்கொள்ள வேண்டாம் என்பதே எங்களுடையது மட்டுமல்ல அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது. ஆனால், ஒரு சிலர் யுட்யூப்பில் பணம் சம்பாதிப்பதற்காக பல விநோத செயல்களைச் செய்து வருகின்றனர். அதற்கான தண்டனைகளையும் காவல்துறையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
GoPro Camera Mounted Inside The Tyre: Here Is Why?
Story first published: Wednesday, August 5, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X