உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

உலகிலேயே விலை குறைந்த எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றான ஒரா ஆர்1 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் க்ரேட் வால் மோட்டார்ஸ், இந்திய எலக்ட்ரிக் கார்களின் பிரிவில் இடம் பிடிக்க பல வருடங்களாக திட்டம் தீட்டி வந்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்நிறுவனத்தின் ஒரா வரிசை கார்களுள் ஒன்றான ஆர்1 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

அளவில் சிறியதாக உள்ள ஆர்1 மாடலில் 33kWh மற்றும் 28.5 kWh பேட்டரிகள் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்படவுள்ளன. இந்த பேட்டரிகள் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 48 பிஎச்பி பவர் மற்றும் 125 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இதன் பேட்டரியை விரைவான சார்ஜிங் நிலையத்தின் மூலம் சார்ஜ் செய்தால் 80 சதவீதத்தை அடைய வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் அதிகப்பட்ச வேகம் 102 kmph ஆகும்.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

விரைவான சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும் பணிகள் நாடுவதும் முழுவதும் தற்சமயம் நடைபெற்று வருவதால், இந்த புதிய மாடலை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வீட்டிலேயே உபயோகிக்கும் வகையிலான சார்ஜர் வழங்கப்படுகிறது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்த எலக்ட்ரிக் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் பேட்டரி ஹீட்டிங் (வெப்பம் குறைவான பகுதியில் காரை இயக்கும்பொழுது உதவும்) மற்றும் ப்ரேக் எனர்ஜி உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

மாருதி சுசுகி செலிரியோ மாடலை விட 3.49 மீட்டர் நீளம் குறைவாக உள்ள இந்த ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் உட்புறத்தில் வாய்ஸ் உரையாடல்களை ஏற்கும் விதத்திலான 9-இன்ச் தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

மேலும் இதன் விலை குறைந்த வேரியண்ட்களும் இரு காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங், பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் கேமிரா, டயரின் அழுத்தத்தை கணக்கிடும் வசதி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய இறக்கை வடிவிலான கண்ணாடிகள், 4 ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் மற்ற அடிப்படை இணைப்பு தொழிற்நுட்பங்கள் அனைத்தையும் க்ரேட் வால் மோட்டார்ஸின் இந்த ஆர்1 எலக்ட்ரிக் மாடல் கார் பெற்றுள்ளது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஆர்1 மாடலின் டாப் வேரியண்ட்டான காட்ட்ஸ் எடிசனுக்கு கூடுதலாக எமர்ஜென்சி காலத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ப்ரேக்கிங் மற்றும் 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

சிங்கிள் சார்ஜில் சுமார் 301- 351 கிமீ தூரம் இயங்கக்கூடிய இந்த ஒரா ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் விலையை இந்திய சந்தையில் ரூ.7.13 லட்சத்தில் ரூ.8.27 லட்சம் வரையில் நிர்ணயிக்க க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

மாருதி சுசுகி 800 மாடலை விட அனைத்து விதங்களிலும் சிறப்பாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் மாடலின் விலையை இன்னும் சில லட்சங்கள் குறைத்தால் நடுத்தர குடும்பத்தினரும் வாங்க யோசிப்பர். மற்றப்படி மற்ற எரிபொருள் கார்களை போல் இந்த எலக்ட்ரிக் காருக்கு அதிகளவில் பராமரிப்பு செலவுகள் ஆகாது என கூறலாம்.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்திற்கு பிறகு க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடல் கார் டாடா டிகோர் இவி மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெனால்ட் எலக்ட்ரிக் கார்களுடன் போட்டியிடவுள்ளது.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இதேபோல் மஹிந்திரா நிறுவனமும், நம்ப முடியாத விலையில் புதிய இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போ மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை அதிர வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை நாளுக்கு நாள் மிக வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆனால், அவை விலை ரூ.10 லட்சத்தை தாண்டுவதால், வெகுஜன வாடிக்கையாளர்களுக்கான மாடல்களாக இல்லை.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் அதிரடியாக புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடலாக வந்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் eKUV100 என்ற பெயரில் வந்துள்ளது.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய மாடலுக்கு ரூ.8.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மிக குறைவான பட்ஜெட்டிலான மின்சார எஸ்யூவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 40kW திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளது. இந்த மின் மோட்டார் 54.4 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டது. மின் மோட்டார் ஆற்றல் முன்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 15.9 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி 45 நிமிடங்கள் பிடிக்குமாம்.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 147 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண மாடலில் இருந்து மின்சார மாடலை வேறுபடுத்தும் விதமாக, முன்பக்க க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மின்சார கார் மாடலாக இருக்கும்.

Most Read Articles
 
English summary
GWM R1 Unveiled At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X