2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

புத்தம் புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த இருப்பதாக கிரேட்வால் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியது. சீனாவில் மிகப்பெரிய எஸ்யூவி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் கிரேட்வால் மோட்டார்ஸ், அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் கால் பதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் 2 புதிய எஸ்யூவி மாடல்களை காட்சிப்படுத்த இருப்பதாக கிரேட்வால் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதில், ஹவல் பிராண்டில் எச் எஸ்யூவி என்ற கான்செப்ட் மாடல் முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

இந்த புதிய எஸ்யூவி மாடலானது வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஹவல் எச்-7 எஸ்யூவியின் அடிப்படையில் இந்தியாவுக்காக மாற்றங்கள் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

புதிய ஹவல் எச்7 கான்செப்ட் எஸ்யூவி மாடலானது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

வெளிநாடுகளில் ஹவல் எச்7 எஸ்யூவியில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

இந்த புதிய எஸ்யூவி தவிர்த்து, ஹவல் கான்செப்ட் விஷன் 2025 என்ற மற்றொரு எஸ்யூவி கான்செப்ட்டையும் கிரேட்வால் மோட்டார்ஸ் காட்சிப்படுத்த இருக்கிறது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

இதுதவிர்த்து, இன்னும் சில கார் மாடல்கள் மற்றும் கார்களுக்கான கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்களையும் கிரேட்வால் மோட்டார்ஸ் தனது அரங்கத்தில் பார்வைக்கு வைக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை கிரேட்வால் மோட்டார்ஸ் கையகப்படுத்தி உள்ளது. எனவே, விரைந்து உற்பத்தி பணிகளை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

அடுத்து, பெங்களூரில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் அமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான கார் மாடல்களை உருவாக்குவதில் இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்.

2 புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தும் கிரேட்வால்!

செயிக் குழுமம் (எம்ஜி மோட்டார்ஸ்), பிஒய்டி மோட்டார்ஸ், எஃப்டபிள்யூஏ ஹெய்மா, சங்கன் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Most Read Articles

English summary
Chinese vehicle maker, Great Wall Motors has revealed that the company will showcase two new concept SUVs at the 2020 Auto Expo.
Story first published: Wednesday, January 29, 2020, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X