Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக எளிமை! கெத்து காட்டாமல் குறைந்த விலை மின்சார காரை இயக்கிய முக்கிய பிரபலம்... ஆச்சரியமா இருக்கே!!
டெஸ்லா நிறுவனத்தின் விலைக் குறைந்த மின்சார காரை கிரீக் நாட்டின் பிரதமர் இயக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு, மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம், மின்வாகன தயாரிப்பை மட்டுமே மையமாக் கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் அனைத்து மின்சார கார் மாடல்களுக்கும் உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பாக, டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு எதிர்பார்த்திராத வகையில் அமோகமான டிமாண்ட் நிலவி வருகிறது.

இந்த காரே அந்நிறுவனத்தின் மலிவு விலைக் கொண்ட மின்சாரக் காராகும். அதேசமயம் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியிருக்கும் மின்சாரக் காராகவும் இது இருக்கின்றது. எனவேதான் வெளிநாட்டவர்கள் மத்தியில் இக்காருக்கு தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த காரையே கிரீஸ் அரசு, அந்நாட்டு பிரமதரின் பயன்பாட்டிற்காக களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மைதானா என்கிற தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

டுவிட்டர் பயனர் ஜேன்னிஸ் 134 (@jannis134) என்பவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடகிஸ் (Kyriakos Mitsotakis) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் டெஸ்லா மாடல் 3 மின்சார காரில் பயணிப்பதற்காக, காருக்குள் நுழைவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படத்தை கிரீஸ் குடிமக்கள் முதல் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ வரை பலர் லைக் செய்திருக்கின்றனர். டெஸ்லா நிறுவனம் மிக சமீபத்திலேயே கிரீஸ் நாட்டு மின்வாக சந்தையில் நுழையும் விதமாக ஏதென்ஸ் நகரத்தில் அதன் மின்சார கார்களுக்கான ஷோ-ரூமை திறந்து வைத்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டெஸ்லா மாடல்3 மின்சார காரை கிரீஸ் பிரதமர் இயக்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இக்கார் பிரதமரின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக வாங்கப்பட்டுள்ளதா?, என்பது கேள்வி குறியாக உள்ளது. ஆம், இக்காரை வாங்கியது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலையும் கிரீஸ் அரசு இதுவரை வெளியிடவில்லை.

அதேசமயம், டெஸ்ட் டிரைவ் செய்யும் விதமாகவே கிரீஸ் பிரதமர் கிரியகோஸ், மாடல் 3 மின்சார காரை இயக்கியிருக்கலாம் என்ற தகவலும் இணையத்தில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. ஆகையால், இதுகுறித்த உறுதி வாய்ந்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. டெஸ்லா மாடல் 3 மின்சார கார் விலையில் குறைவானதாக காணப்பட்டாலும், அதில் பல்வேறு லக்சூரி அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, அல்ட்ரா லக்சூரி வசதிகளை மிஞ்சும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை மாடல் 3 பெற்றிருக்கின்றது. மேலும் ரேஞ்ஜ் மற்றும் தொழில்நுட்ப விஷயத்திலும் டெஸ்லா மாடல் 3 மின்சார கார் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தொடர்ந்து, இக்காரை சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் சார்ஜ் செய்தால் வெறும் 30 நிமிடங்களில் 270 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை பெற முடியும்.

துரதிரஷ்டவசமாக இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இந்த கார் மட்டுமில்லைங்க இந்நிறுவனத்தின் எந்தவொரு மின்சார காரும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த நிலை விரைவில் மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான முயற்சியிலேயே டெஸ்லா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடகிஸ் டெஸ்லா மாடல் 3 மின்சார காரை இயக்கியிருப்பது அந்நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, மின்வாகனங்களின் பக்கம் மக்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, மின்வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அவர் வரி சலுகை போன்ற ஊக்குவிப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இதனால், தற்போது அந்நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் மின்வாகனங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இது, அந்த நாட்டின் ஒட்டுமொத்த வாகன அடர்த்தியில் 0.3 சதவீதம் ஆகும். இது மிக மிக குறைவாக இருந்தாலும் அந்நாட்டு அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சியினாலயே இந்த எண்ணிக்கையை கிரீஸ் எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.