ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

இன்னும் சில நாட்களில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஹவால் பி06 எஸ்யூவி மாடலை பற்றிய தகவல்களை க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் டீசர் படங்கள் மூலமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

ஹாவல் ப்ராண்ட்டில் வழக்கமான எஸ்யூவி கார்களுடன் இணையவுள்ள இந்த புதிய மாடலின் நிமிர்ந்த முன்பக்கத்தில் ஹவால் பேட்ஜ் உடன் மூன்று ஸ்லேட்டட் குரோம் கிடைமட்ட க்ரில் உள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

சற்று சதுரமான க்ளஸ்ட்டருடன் பொருத்தப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பை நிச்சயம் நீங்கள் ஜீப் ரெனிகேட் மாடலில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. க்ரே நிறத்திலான பம்பர் பகுதியானது, ஃபாக் விளக்குகள் மற்றும் கார் முன்புறமாக மோதுவதை தடுக்கும் விதத்திலான பாதுகாப்பான் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

மற்ற அம்சங்களாக விண்ட்ஷீல்ட், தட்டையான மற்றும் மஸ்குலர் வடிவத்தில் பொனெட், கருப்பு நிற க்ளாடிங், பக்கவாட்டு படிக்கட்டுகள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. பின்புறத்தில் இந்த ஹவால் எஸ்யூவி மாடல் L-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், நிமிர்ந்த டெயில்கேட் மற்றும் ஸ்கிட் தட்டுகளை பெற்றுள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் எச் மாடலை பெரிய அளவில் ஒத்து காணப்படும் புதிய பி06 எஸ்யூவி மாடலை புதிய கட்டமைப்பில் உருவாக்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

இதனால் இந்த எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம். மற்றப்படி காரின் உட்புற படங்கள் கிடைக்க பெறவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இதன் உட்புற கேபினில் தற்போதைய மாடர்ன் கார்களுக்கு இணையான நவீன தொழிற்நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

இந்த வகையில் ஹவால் பி06 எஸ்யூவி மாடலில் இணைப்பு வசதிகளுடன் பெரிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லேயர்டு டேஸ்போர்டு, ப்ரீமியம் மைய கன்சோல், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், குறைந்த அளவில் பொத்தான்கள் வழங்கப்படலாம்.

ஜீப் ரெனிகேட் மாடலை ஒத்த முன்பக்க தோற்றத்துடன் ஹவால் பி06 எஸ்யூவி கார்...

ஹவால் ப்ராண்ட் தான் சீனாவில் மிக பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள க்ரேட்வால் மோட்டார்ஸில் இருந்து இந்திய சந்தையில் அறிமுகமாகும் முதல் ப்ராண்டாக விளங்கவுள்ளது. இதற்காக க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.7,000 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Haval B06 SUV Unveiled With Jeep Renegade Inspired Front Design
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X