மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

சீன தயாரிப்பு ஒன்று மோதல் பரிசோதனையில் மண்ணைக் கவ்வியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்ஜர் பிக்-அப் டிரக்கிற்கு போட்டியளிக்கும் வகையில் சீன நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய வாகனம் ஸ்டீட் 5. இந்த பிக்-அப் டிரக் தென் ஆப்பிரிக்கா போன்று குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரையே குளோபல் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

இந்த பரிசோதனையில் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பூஜ்ஜியம் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதற்கு, ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் பாதுகாப்பிற்கு சற்றும் உகந்த கார் அல்ல என்பதே பொருள் ஆகும். நட்சத்திரங்களின் அடிப்படையில் பாதுகாப்பிற்கான ரேட்டிங்கை குளோபல் என்சிஏபி அமைப்பு வழங்கும். அந்தவகையில், அதிகபட்சமாக 5 நட்சத்திரங்கள் வரை அது வழங்கும்.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

ஆனால், கிரேட் வால் மோட்டார்ஸின் ஸ்டீட் 5 கார் ஒரு நட்சத்திரங்களைக் கூட பெறவில்லை. ஐந்திற்கு பூஜ்ஜியம் ஸ்டாரையே அது பெற்றிருக்கின்றது. இது தென்னாப்பிரிக்க மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது தென்னாப்பிரிக்காவிற்கு ஸ்பெக் மாடல் ஆகும்.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

கிராஷ் டெஸ்டின்போது மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் இக்கார் இயக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக, இந்த வேகத்தில்தான் குளோபல் என்சிஏபி தனது விபத்து பரிசோதனையை மேற்கொள்வது வழக்கம். இதனடிப்படையிலேயே ஸ்டீட் 5 பிக்-அப் டிரக்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரியவர்களின் பாதுகாப்பில் பூஜ்ஜியம் புள்ளிகளை மட்டுமே பெற்றது.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

இந்த ஆய்வு 17 புள்ளிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த மிக தாழ்ந்த புள்ளிகளுக்கு பிக்-அப் டிரக்கில் ஏபிஎஸ் மற்றும் ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனால், இந்த மலிவு விலை பிக்-அப் டிரக் மோதல் சோதனையில் மண்ணைக் கவ்வியிருக்கின்றது.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

சீட் பெல்ட் அணிந்தவாறு அமர்த்தப்பட்டிருந்த போதிலும் மோதலின்போது டம்மிகள் கடுமையாக சேதத்தைச் சந்தித்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது தர மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டம்மிகளின் தலை பகுதி நேரடியாக ஸ்டியரிங் வீலில் மோதி பெருத்த சேதத்தைப் பெற்றிருக்கின்றது.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

இதுமட்டுமின்றி, டம்மிகளின் மார்பக பகுதி மற்றும் கால் பகுதி ஆகியவையும் மிக கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இவற்றின் அடிப்படையிலேயே இக்கார் துளியளவும் பாதுகாப்பான பயணத்திற்கு வாகனம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

கிரேட் வால் மோட்டார்ஸ் இந்த பிக்-அப் டிரக்கை 13,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைச் செய்து வருகின்றது. இது இந்திய மதிப்பில் 9,56 லட்ச ரூபாய் (தோராய மதிப்பு) ஆகும். பன்முக வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த வாகனத்தின் எஸ்எக்ஸ் வேரியண்டில் பாதுகாப்பு அம்சங்களாக இரு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

மோதல் பரிசோதனையில் மண்ணை கவ்விய சீன தயாரிப்பு... நல்ல வேல நம்ம ஆளுங்க தப்பிச்சிட்டாங்க...

இம்மாதிரியான சூழ்நிலையிலும் ஜிடபிள்யூஎம் ஸ்டீட் 5 பிக்-அப் டிரக் ஒரு ஸ்டார் ரேட்டிங்கைக் கூட பாதுகாப்பு விஷயத்தில் பெறவில்லை. இது இந்த பிக்-அப் டிரக்கின் கட்டுமானத்தின்மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் நடப்பாண்டு கால் தடம் பதிக்க இருந்தது.

ஆனால், சீனாவிற்கு எதிரான இந்தியாவில் நிகழ்வதால் இதன் விஜயத்தில் தற்போது இழுபறி நீடித்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த நிறுவனத்தின் வருகை சந்தேகம்தான் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த காலங்களில் சீன நாட்டு ராணுவனத்தின் மேற்கொண்ட அத்துமீறல் மற்றும் சில கசப்பான செயல்களின் காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது.

Most Read Articles

English summary
GWM Steed 5 Gets 0 Star Rating In Global NCAP Crash Test. Read In Tamil.
Story first published: Wednesday, December 9, 2020, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X