ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

ஹவல் எஸ்யூவிகள், ஒரா இவி மாடல்களை தொடர்ந்து சீனாவை மைய இடமாக கொண்ட க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஹவல் விஷன் 2025 கான்செப்ட் எஸ்யூவியை 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் சந்தையில் இந்த கான்செப்ட் வாகனத்தை அடிப்படையாக கொண்ட காரை எப்போது எதிர்பார்க்கலாம் என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

ஏற்கனவே கூறியதுபோல் க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஹவல் எஸ்யூவிகள், ஒரா எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹவல் கான்செப்ட் எஸ்யூவி உள்ளிட்டவற்றை எல்லாம் சேர்த்து மொத்தம் 13 தயாரிப்பு கார்களை டெல்லி அருகே நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

மிகவும் தெளிவான வெளிப்புற டிசைன் அமைப்பை இந்த கான்செப்ட் மாடல் பெற்றுள்ளதால் இதே டிசைனில் சில விற்பனை மாடல்களை க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து இன்னும் சில வருடங்களில் எதிர்பார்க்கலாம்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

காரின் முன்புற முனையில் உள்ள வெள்ளை நிற க்ரில் பகுதி, காரின் மற்ற முன்புற பாகங்கள் மற்றும் பிளவுப்பட்ட ஹெட்லைட்ஸ் உடன் ஒன்றோடு ஒன்றாக கலந்திருப்பதுபோல் உள்ளது. பக்கவாட்டில் முரட்டுத்தனமான தோற்றத்தில் சக்கரங்களை இந்த கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

இந்த கான்செப்ட் வாகனத்தின் பின்புறம், கான்செப்ட் எஸ்யூவி மாடல்களுக்கே உண்டான தடிமனான இணைக்கப்பட்ட ஹெட்லைட்ஸ் பகுதியை கொண்டுள்ளது. வெளிப்புறத்திற்கு ஏற்ற வகையில் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்கள் இந்த கான்செப்ட் வாகனத்தின் உட்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

இதில் முக்கியமாக ஃபேசியல் மற்றும் பயோமெட்ரிக் அனுமதித்தால் மட்டுமே என்ஜின் ஸ்டார்ட் ஆகும் வசதி மற்றும் AR-HUD உள்ளிட்டவை உள்ளன. இதில் AR-HUD அமைப்பு பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன் பகுதியின் மூலம் அதிகளவில் தகவல்களை ஓட்டுனருக்கு வழங்கும்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

இவற்றை தவிர உட்புறத்தில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க மாற்றமாக, பின்புறத்தை பார்ப்பதற்கு கண்ணாடிக்கு பதிலாக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள், ஆடி இ-ட்ரான் மாடலில் உள்ளதை போல் கோடுகளை கொண்ட திரைகளுடன் காணப்படுகின்றன.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

இந்த தொழிற்நுட்பங்களில் ஃபேசியல் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தில் காரின் உரிமையாளர் பதிவு செய்துள்ள டேட்டாபேஸ் தகவல்களை அடிப்படையாக கொண்டு மல்டிமீடியா மற்றும் இருக்கை விருப்பத்தேர்வுகளை அமைக்க முடியும்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

காரின் உட்புறத்தில் உள்ள மற்ற தொழிற்நுட்பங்கள் ரிமோட் கண்ட்ரோல் ப்ரேஸ்லெட்-ஐ கொண்டுள்ளன. இந்த ப்ரேஸ்லெட் மூலம் ஓட்டுனர் தேவையான பேக்கேஜ்களையும் குறுந்தகவல்களையும் நேரடியாக காரின் மூலமாகவே பெற முடியும்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

இவை மட்டுமில்லாமல் கனெக்டட் கார் தொழிற்நுட்பங்களையும் இந்த கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது. இந்த கனெக்டட் தொழிற்நுட்பங்கள் அனைத்தும் எஸ்யூவிகளின் அட்வான்ஸ்டு ஆன்போர்டு கண்ட்ரோல் சிஸ்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஹவல் விஷன் 2025 அடிப்படையிலான எஸ்யூவி எப்போது சந்தைக்கு வரும்..?

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த கான்செப்ட் வாகனத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விற்பனை மாடல் 2025ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டிலோ வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குறைந்தது இந்த கான்செப்ட் மாடல் கொண்டுள்ள தொழிற்நுட்பங்களை கொண்ட புதிய தயாரிப்பு மாடலையாவது க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2025ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Haval Vision 2025 based SUV launch details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X