Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உலகின் அதி-வேக கார்... இதுல போன தலை சுத்தல் வருதோ இல்லையோ, ஆனா இதோட விலை மயக்கத்தையே வரவைக்குது...
உலகின் அதி வேக காரை ஹென்னஸ்ஸி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிக வேகமான கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. புகாட்டி நிறுவனத்தின் சிரோன் காரே உலகின் மிக மிக வேகமான கார் என்ற பட்டத்தைச் சூடி வந்ததது. நாம் பார்க்கவிருப்பது இந்த கார் பற்றி அல்ல. இந்த காரை புதிய உச்சபட்ச வேகத்தில் வீழ்த்தியிருக்கும் ஹென்னெஸ்ஸி நிறுவனத்தின் வெனோம் எஃப்5 கார் பற்றியே பார்க்கவிருக்கின்றோம். இக்காரே தற்போது சிரோனின் பதவியைத் தட்டி பறித்த காராகும்.

சிரோன் கார் உச்சபட்சமாக மணிக்கு 304 மைல் எனும் வேகத்தில் இயங்கக்கூடியது ஆகும். இந்த திறனையே ஹென்னெஸ்ஸி வெனோம் எஃப்5 தற்போது முறியடித்திருக்கின்றது. இக்கார் மணிக்கு 311 மைல் எனும் வேகத்தில் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அதாவது, மணிக்கு 500 கிமீ எனும் வேகத்தில் இயங்கும் திறனில் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு உச்சபட்ச திறனை வெளியேற்றக்கூடிய கார் வேறெதுவும் இந்த உலகில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இந்த பூமியின் அதிக வேகத்தில் இயங்கக்கூடிய கார் என்ற பட்டத்தை வெனோம் எஃப்5 பெற்றிருக்கின்றது.

வெனோம் எஃப்5 கார் வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தைத் தொடுவிடுமளவிற்கு திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த திறன வெளிப்படுத்துமளவிற்கு 6.6 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜட் வி8 எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 1,817 எச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இத்தகைய திறன் வெளிப்பாட்டிற்கு காரின் குறைந்த எடை மற்றும் புத்தம் புதிய டிசைன் உள்ளிட்டவையும் காரணம் என கூறப்படுகின்றது. இதன் எடைக்குறைவான உருவத்திற்காக கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது, எடைக்குறைவானதாக இருந்தாலும் சற்று உறுதித் தன்மைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

இதேபோன்று, இதன் சேஸிஸிலும் எடைக் குறைப்பு வேலை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கார்பன்-ஃபைபர் மோனோகாக் சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு எடைக்குறைப்பு வேலைகளின் காரணத்தினாலயே இதன் திறன் மேலும் மேம்பட்டுள்ளது. இதில், ஐந்து விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஸ்போர்ட், டிராஃக், ட்ராக், வெட் மற்றும் எஃப்ஐ என ஐந்து மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்ஜின் திறனில் மட்டும் இக்கார் சிறப்பு வாய்ந்ததது என எண்ணி விட வேண்டாம். இக்காரில் சொகுசு வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இக்காரில் டேஷ்போர்டு முதல் இருக்கை வரை அனைத்தும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய லக்சூரி அம்சங்களைக் கொண்டிருக்கின்றது.

இக்காரில் மிக முக்கியமானதாக 7.0 இன்ச் அளவிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கின்றது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியைக் கொண்டிருக்கின்றது. இத்துடன் இதில் நேரடியாக சேட்டிலைட் நேவிகேஷனுடன் இணைக்கப்பட்ட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், கார் எந்த மூலையில் இருந்தாலும் மிக அசால்டாக கண்டுபிடித்து விடலாம்.

இத்தகைய பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட இக்காரை வெறும் 24 அலகுகளில் மட்டுமே ஹென்னெஸ்ஸி தயாரித்துள்ளது. ஆகையால், இக்காரை குறிப்பிட்ட 24 பேர் மட்டுமே பயன்படுத்த இருக்கின்றனர். இப்போது நாம் பார்த்த அனைத்து தகவல்களைக் காட்டிலும் இதன் விலை நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது.

ஆமாங்க, இந்த காரின் விலை 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 15.42 கோடிகள் ஆகும். இது ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. உலகின் மிக சிறந்த கார் இதுவென்பதால் இத்தகைய விலையை ஹென்னெஸ்ஸி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.