ஹோம் மேட் சாக்லேட் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. இளைஞரின் அசத்தலான திறன்

ஹோம் மேட் சாக்லேட், ஊறுகாய், நெய் மற்றும் அழகு சாதனப் பொருட்களைப் போன்று கேரளவைச் சேர்ந்த ஓர் இளைஞர் வீட்டிலேயே வைத்து விண்டேஜ் காரை தயாரித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

வீட்டிலேயே வைத்து ஊறுகாய், வத்தல் போன்ற தின்பண்டங்களை தயாரித்திருப்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். ஏன், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் செல்போன், மின்சாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரிக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.

இதேபோன்று, இளைஞர் ஒருவர் தற்போது தனது சொந்த கராஜில் வைத்தே மிகவும் கவர்ச்சியான மற்றும் கிளாசியான தோற்றத்தில் கார் ஒன்றை தயாரித்துள்ளார்.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

ஆகையால், ஹோம் மேட் நெய், சாக்லெட் போல இந்த காரும் ஹோம் மேட் தயாரிப்பாக மாறியிருக்கின்றது. இதனை கடவுளின் தேசம் என்று போற்றப்படும் கேரளா மாநிலத்தின் செர்தலா பகுதியில் உள்ள ராகேஷ் பாபு என்ற இளைஞர் தான் வடிவமைத்துள்ளார்.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இது, அவரின் அசாத்தியான கார் கட்டுமான திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது. இவர், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான கிளாசிக் தோற்றம்கொண்ட பீட்டில் மாடலைதான் வீட்டிலேயே வைத்து கட்டமைத்துள்ளார்.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இதற்கான எஞ்ஜினை எந்த வாகனத்தில் பெற்றார் என தெரிந்தால் மிகவும் ஆச்சரியமடைவீர்கள். 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான பைக்கான சுஸுகி சாமுராய் பைக்கின் எஞ்ஜினைப் பயன்படுத்தியே இந்த காருக்கு சக்தியை வழங்கியுள்ளார் ராகேஷ் பாபு.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இந்த கார் வீட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட கார் உற்பத்திசாலையில் வைத்து தயாரிக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கின்றது.

மேலும், சாலையில் செல்லும்போது தனித்துவமான காட்சியைப் பார்வையாளர்களுக்கு வழங்கி, அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இந்த காரின் சேஸிஸ் எனப்படும் கட்டுமானக்கூடு முதல் அனைத்தையும் ராகேஷ் பாபு வீட்டிலேயே வைத்து தயாரித்துள்ளார். இதனை சுடுஸ் கராஜ் என்ற மலையாள யுடியூப் சேனல் ஒன்று வீடியோ மூலம் உறுதி செய்திருக்கின்றது.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சுஸூகி சாமுராய் பைக்கின் எஞ்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 30 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது சாதாரண காரைக் காட்டிலும் அதிகம் ஆகும். இந்த எஞ்ஜின் நேரடியாக காரின் பின்புறச் சக்கரங்களுக்கு இழுவை திறனை அளிக்கின்றது.

மோட்டார்சைக்கிளில் என்ன திறனை வழங்கியதோ அதே திறனைதான் துளியளவும் மாற்றமின்றி காரிலும் வழங்குகின்றது.

பீட்டிலை இரு சீட்டர் மாடலாக ராகேஷ் பாபு கட்டமைத்திருக்கின்றார். இவர், மெக்கானிக்காக பணி புரிந்து வருகின்றார். இதனாலயே இந்த காரை அவர் எளிதில் சிறப்பானதாக கட்டமைத்திருக்கின்றனர். அந்தவகையில், உண்மையான ஃபோக்ஸ்வேகன் பீட்டில் எப்படி காட்சியளிக்குமோ அப்படியே பார்வையாளர்களை ஏமாற்றி பீட்டில் என்ற உணர்வை இந்த மாடிஃபை கார் வழங்குகின்றது.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

சேஸிஸை தன் கைகளாலயே கட்டமைத்ததைப் போன்று காரின் கட்டுமஸ்தான பாடியை இரும்பு ஷீட்டுகளைக் கொண்டு அவரே வடிவமைத்தார். இதன் வீல்கள் மட்டும் ஆட்டோ ரிக்ஷாக்களிடம் இருந்து பெற்றிருக்கின்றார். இந்த சிறிய வீல்கள் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை வழங்குகின்றது.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

தொடர்ந்து, காரில் பிரிமியம் வசதிக்காக விண்ட்ஷீல்ட் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் இணைத்துள்ளார். அதில், விண்ட்ஷீல்ட் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துடன், நவீனரக புதிய கார்களில் காணப்படுவதைப் போன்று புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்களையும் பயன்படுத்தியுள்ளார்.

ஹோம் மேட் ஊறுகாய், வத்தல் போல வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனதை கவரும் விண்டேஜ் கார்.. கேரள இளைஞரின் அசாத்தி திறமை!

இந்த காரை முழுமையாக வடிவமைக்க 3 மாதங்கள் எடுத்துக்கொண்டதாக ராகேஷ் பாபு தெரிவித்துள்ளார். இதற்கான செலவு என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், 1.5 முதல் 2 லட்சங்களுக்குள்ளாகவே இந்த மலிவு விலை விண்டேஜ் காரை அவர் தயாரித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இந்த கார் மாடிஃபை செய்யப்பட்ட கார் என்பதால் வாகன சட்டத்தின்படி ஆர்டிஓ பதிவு செய்ய முடியாது. மேலும் சாலையிலும் இயக்க முடியாது. ஆனால், இது ராகேஷின் அசாத்தியமான திறனை வெளிப்படுத்த உதவும். மேலும், இந்த உலகில் சிறந்த வடிவமைப்பாளர் என்பதை வெளிப்படுத்தவும் இந்த தயாரிப்பு உதவும்.

Most Read Articles

English summary
HomeMade Vintage Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X