பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வை அளிக்கும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் இவ்வேளையில் புதிய கார் வாங்குவதற்கான ஆயத்தத்தில் வாடிக்கையாளர்கள் இறங்கி உள்ளனர். பண்டிகை காலத்தில் புதிய வாகனம் வாங்குவதை கூடுதல் மகிழ்ச்சியை தரும் என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில், புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகள், சிறப்பு பதிப்பு கார் மாடல்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா அமேஸ் காரின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

இந்த நிலையில், புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகள், சிறப்பு பதிப்பு கார் மாடல்களை முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா அமேஸ் காரின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ் காரின் எஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் என இரண்டு எஞ்சின் தேர்விலும், மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் கிடைக்கும்.

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலில் வெளிப்புறத்தில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அலங்காரத்துடன் மிகவும் வசீகரமாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. ஸ்பெஷல் எடிசன் லோகோ பேட்ஜும் கொடுக்கப்பட்டு இருப்பதால் அதிக மதிப்பை தரும்.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

இந்த மாடலில் விசேஷ சீட் கவர்கள், ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டிஜிபேட் 2.0 17.7 செமீ தொடுதிரையுடன் கூடிய நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் குறித்து ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் கோயல் கூறுகையில்,"பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஸ்பெஷல் எடிசன் அமேஸ் காரை அறிமுகம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். அமேஸ் காரில் அதிகம் விற்பனையாகும் எஸ் வேரியண்ட் அடிப்படையில் இந்த புதிய மாடலை களமிறக்கி உள்ளோம்.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

இந்த காரில் வழங்கப்படும் வசதிகளுடன் தற்போது சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் சிறப்பம்சங்கள் அதிக மதிப்பை வழங்கும் என்பதுடன் கவர்ச்சிகரமான விலையில் கொண்டு வந்துள்ளோம். இது வாடிக்கையாளர்களை கவரும்," என்று தெரிவித்துள்ளார்.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

பண்டிகை கால கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகம்!

ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.7 லட்சத்திலும், சிவிடி மாடல் ரூ.7.90 லட்சத்திலும் கிடைக்கும். டீசல் மேனுவல் மாடல் ரூ.8.30 லட்சத்திலும், டீசல் சிவிடி மாடல் ரூ.9.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

குறிப்பு: கடைசி மூன்று ஸ்லைடுகளில் சாதாரண ஹோண்டா அமேஸ் காரின் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Honda has announced the introduction of Special Edition of its family sedan Honda Amaze to mark the beginning of the festive season and elevate the fervor that comes with it. The Special Edition comes with new and exciting features and is based on the popular S grade in MT and CVT version of both Petrol and Diesel.
Story first published: Wednesday, October 14, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X