இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்! விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்பவே மாட்டீங்க

ஹோண்டா நிறுவனம் அதன் அமேஸ் செடான் மற்றும் டபிள்யூஆர்-வி எஸ்யூவி ஆகிய இரு மாடல்களையும் பிரத்யேக பதிப்புகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியர்களைக் கவரும் நோக்கில் இக்கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

உலக புகழ் பெற்ற மற்றும் இந்தியர்களின் விருப்பமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றே ஹோண்டா. இந்நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த இரு தயாரிப்புகளை 'எக்ஸ்க்ளூசிவ் எடிசனில்' உருவாக்கி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த இரு சிறப்பு கார்களே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) இவையே தற்போது பிரத்யேக பதிப்புகளாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இக்கார்கள் 'பிரத்யேக பதிப்புகள்' என்பதால் பல்வேறு சிறப்பு அம்சங்களை நம்மால் அவற்றில் காண முடிகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

அதாவது, தோற்றத்தில் கணிசமான மாற்றம் மற்றும் சில சிறப்பு கூறுகளைத் தாங்கிய கார்களாக அவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால்தான் இக்கார்கள் தற்போது இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதில், ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ. 7.96 லட்சமும், டபிள்யூஆர்-வி காருக்கு 9.70 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

ஹோண்டா அமேஸ் மற்றும் டபிள்ஆர்-வி மாடல்களில் விஎக்ஸ் எனும் தேர்வே உயர்நிலை வேரியண்டாக உள்ளது. இந்த வேரியண்டின் அடிப்படையிலேயே புதிய பிரத்யேக பதிப்புகள் உருவாக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பதிப்பை டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய தேர்வில் வழங்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாட்டையும் அது ஏற்கனவே செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

சரி, பிரத்யேக பதிப்புகளுக்கும் வழக்கமான வேரியண்டிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?., இதனை பெரியளவில் நம்மால் காண முடியவில்லை. உருவம் மற்றும் பிரீமியம் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்களை ஹோண்டா செய்துள்ளது. செய்யப்பட்ட மாற்றம் கணிசமானதாக இருந்தாலும், அதன் கவர்ச்சி பன் மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, பிரீமியம் அம்சத்திற்கு பெயர்போன தேர்வாக விஎக்ஸ் வேரியண்டுகள் இருக்கின்றன. இதில், கூடுதல் பிரீமியம் வசதிகளையே தற்போது பிரத்யேக பதிப்பின் வாயிலாக ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

பிரத்யேக பதிப்பு ஹோண்டா அமேஸ் காம்பேக்ட் செடான் ரக காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள், ஜன்னல் மற்றும் காரின் ஒரு சில பகுதிகளில் குரோம் மோல்டிங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பனி விளக்கு மற்றும் டிரங்க் பகுதிகளில் குரோம் பூச்சுக்கொண்ட கார்னிஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த புதிய சேர்க்கைகள் அமேஸ் காரை கூடுதல் அழகாக காண்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

இத்துடன், கால்களை வைக்கும் இடங்களில் மின் விளக்கு வசதியும், காரின் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளில் பிரத்யேக பதிப்பு என்ற பேட்ஜ்களும் ஒட்டப்பட்டிருகின்றன. தொடர்ந்து காரின் உட்பகுதியில் பிரத்யேக தோற்றம் மற்றும் வசதிக்காக கருப்பு நிற இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சிறப்பு அலங்கரிப்பு விஷயங்களைதான் மற்றுமொரு பிரத்யேக பதிப்பான ஹோண்டா டபிள்யூஆர்-வி காரும் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

ஹோண்டா டபிள்யூஆர்-வி ஓர் எஸ்யூவி ரக காராகும். இக்காரிலும் அழுகுபடுத்தும் முயற்சியாக ஆங்காங்கே குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன்கள் பிரத்யேகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெட்லைட், பனி விளக்கு மற்றும் பம்பரின் மையப்பகுதி ஆகியவற்றில் குரோம் பூச்சுக் கொண்ட கூறுகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

தொடர்ந்து, பிரத்யேக பதிப்பு என்பதால் மிக மெல்லிய இருக்கை உறைகள், அதிக லக்சூரி வசதியை வழங்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு கிராஃபிக் பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை ஹோண்டா டபிள்யூஆர்-வி காரில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு வசதிகளால்தான் இந்த கார்கள் பிரத்யேக பதிப்புகள் என்ற பட்டத்தைச் சூடியிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

எஞ்ஜின் விபரம்:

ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் அமேஸ் ஆகிய இரு கார்களும் ஒரே மாதிரியான எஞ்ஜின் தேர்வுகளையேக் கொண்டிருக்கின்றன. அதாவது, இரு கார்களும் 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

இதேபோன்று, டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதில், ஹோண்டா அமேஸ், ஐந்து விதமான மேனுவல் வேக கட்டுப்பாடு மற்றும் ஆறு விதமான சிவிடி தானியங்கி கட்டுப்பாடுகளுடைய கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

ஆனால், ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலுமே இதேநிலைதான் காணப்படுகின்றது. ஸ்பெஷல் பேட்ஜ் மற்றும் அலங்கார விஷயங்களை வேறெந்த சிறப்பு வசதிகளையும் இக்கார்கள் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் இக்கார்கள் பெரியளவில் விலையுயர்வைப் பெறாமல் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

விலை பட்டியல்:

ஹோண்டா அமேஸ் விலை:

ஹோண்டா அமேஸ் எம்டி சிவிடி
பிரத்யேக பதிப்பு பெட்ரோல் ₹7,96,000 ₹8,79,000
பிரத்யேக பதிப்பு டீசல் ₹9,26,000 ₹9,99,000

ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை:

ஹோண்டா டபிள்யூஆர்-வி எம்டி
பிரத்யேக பதிப்பு பெட்ரோல் ₹9,69,900
பிரத்யேக பதிப்பு டீசல் ₹10,99,900
இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் சிறப்பு பதிப்பு கார்கள்... இவற்றின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!!

புதிய பிரத்யேக பதிப்பு கார்கள் பற்றி அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை இயக்குனரான ராஜேஷ் கோயல் கூறுகையில், "இந்த பண்டிகை காலங்களில், எங்கள் மாடல்களை ஒரு தனித்துவமான பிரீமியம் தொகுப்புடன் வளப்படுத்த நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். இது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அமேஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடல்களின் புதிய பதிப்புகள் உயர்தர விஎக்ஸ் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த தோற்றத்தை வழங்கும் நோக்கில் இது செய்யப்பட்டுள்ளது. இது வரும் பண்டிகை காலத்தில் நல்ல பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

குறிப்பு: 11 முதல் 14 வரையிலான புகைப்படங்கள் வழக்கமான மாடல்களுடையது ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Amaze & WR-V ‘Exclusive Editions’ Launched In India: Prices Start At Rs 7.96 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X