ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்!

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், ஹோண்டா கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தரும் விஷயமாக இருக்கும். எந்தெந்த ஹோண்டா காருக்கு எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கார் விற்பனை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த மாதம் நவராத்திரி பண்டிகை காலத்தில் எதிர்பார்த்ததைவிட பல நிறுவனங்களுக்கு கார் விற்பனை சிறப்பாக அமைந்தது.

இதனை தக்க வைக்கும் விதத்தில், பல நிறுவனங்கள் சேமிப்புச் சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனமும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்து உள்ளது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

இதன்படி, ஹோண்டா கார் நிறுவனம் தனது பெரும்பாலான கார்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை தொடர்ந்து வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட் என்ற பெயரில் இந்த சிறப்புச் சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் கார் மீது ரூ.40,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேமிப்புச் சலுகையாகவும் பெற முடியும். இந்த கார் ரூ.7.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.47,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.20,000 வரையிலும், டீசல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.10,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பும், நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுக்கான ரூ.12,000 மதிப்புடைய கூடுதல் கால வாரண்டி சலுகையையும் பெற இயலும்.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

அமேஸ் ஸ்பெஷல் எடிசன்

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அமேஸ் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.7,000 வரை தள்ளுபடியும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு ரூ.40,000 வரை தீபாபளி சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ரூ.25,000 வரையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். ஹோண்டா டபிள்யூஆர்வி கார் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக் காருக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் வேரியண்ட்டுகள் மீது ரூ.1 லட்சம் வரையிலும், டீசல் வேரியண்ட்டுகள் மீது ரூ.2.50 லட்சம் வரையிலும் சேமிக்க முடியும். லாயல்டி போனஸாக ரூ.6,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.10,000 வரையிலும் வழங்கப்படுகிறது.

ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்!

புதிய ஹோண்டா கார்களுக்கான இந்த சேமிப்புச் சலுகைகள் நிச்சயம் இந்த பண்டிகை காலத்தில் ஹோண்டா கார் வாங்குவோருக்கு சிறந்த மதிப்பை அளிக்கும். கடந்த 1ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை இந்த சேமிப்புச் சலுகைகள் அமலில் இருக்கும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda Cars India has announced festive discounts, benefits and special offers called 'The Great Honda Fest' for Diwali this year. The company is offering festive season discounts on its select line-up of vehicles currently sold in the market. This includes the Jazz, fifth-gen City, Amaze, Amaze Special Edition, WR-V and the Civic.
Story first published: Wednesday, November 4, 2020, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X