விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

புதிய ஹோண்டா சிட்டி கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் சந்தையில் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா சிட்டி கார் உள்ளது. புதிய மாருதி சியாஸ் கார் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களால் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

கடந்த ஆண்டு தாய்லாந்து மோட்டார் ஷோவில் முதல்முறையாக புதிய ஹோண்டா சிட்டி கார் காட்சி தந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

புதிய ஹோண்டா சிட்டி கார் 5ம் தலைமுறை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய சிட்டி கார் 113 மிமீ கூடுதல் நீளமும், 53 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், வீல் பேஸ் நீளம் 28 மிமீ வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

புதிய ஹோண்டா சிட்டி கார் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய மாடலில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ரியர் பார்க்கிங் சென்சார்க், ரியர் பார்க்கிங் கேமராக்கள், டிஜிட்டல் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே சிஸ்டம் மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் பிஎஸ்-6 தரத்த்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும். புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிட்டி ஆர்எஸ் டர்போ மாடலும் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஞ்சின் 122 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆனால், இந்த மாடல் இந்தியா வருவது சந்தேகமாக உள்ளது.

விரைவில் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய ஹோண்டா சிட்டி கார்!

ஹோண்டா சிட்டி கார் ரூ.9.91 லட்சம் முதல் ரூ.14.31 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல் ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Japanese car manufacturer, Honda, is ready to launch the all new 2020 Honda City in India next month. The vehicle has been spotted testing on Indian roads, and was launched in Thailand the Thai Motor Expo 2019.
Story first published: Tuesday, February 11, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X