2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

ஹோண்டா சிட்டி செடான் கார் கடந்த 2020 நவம்பர் மாத விற்பனையில் சுமார் 135 சதவீத முன்னேற்றத்தை கண்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை சிட்டி செடான் காரை 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முந்தைய தலைமுறை உடன் விற்பனை செய்யப்பட்டாலும், 2020 சிட்டி செடானுக்கு உண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் தற்போது இந்த ஹோண்டா காரின் 2020 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் மொத்தம் 3,523 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

இது 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 134.87 சதவீதம் அதிகம். பழைய தலைமுறை மட்டும் விற்பனையில் இருந்த அந்த சமயத்தில் வெறும் 1500 சிட்டி கார்களையே ஹோண்டாவால் இந்தியாவில் விற்க முடிந்தது. அதேபோல் முந்தைய 2020 அக்டோபர் மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை 30.05 சதவீதம் அதிகமாகும்.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

ஏனெனில் அந்த மாதத்தில் 2,709 யூனிட் சிட்டி கார்கள்தான் விற்கப்பட்டுள்ளன. இதனால் அக்டோபரை தொடர்ந்து கடந்த நவம்பர் மாத விற்பனையிலும் ஹோண்டா சிட்டி அதன் போட்டி மாடல்களான மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வென்யூ உள்ளிட்டவற்றை முந்தியுள்ளது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

ஹோண்டா சிட்டியின் இந்த அதீத வளர்ச்சிக்கு முழு காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், அதன் புதிய தலைமுறையின் வருகையே. 2020 ஹோண்டா சிட்டி காரில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

இதில் ஒன்றான 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 145 என்எம் டார்க் திறனையும், மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் ‘ஐ-டிடிஇசி' டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக உள்ளன.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

இந்த இரு என்ஜின்களுடனும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினிற்கும் மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. விற்பனையில் இருக்கும் பழைய (நான்காம்) தலைமுறை சிட்டி கார் ஒரே ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கிறது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

இந்த பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 119 பிஎஸ் மற்றும் 145 என்எம் டார்க் திறனை பெற முடியும். என்ஜின் மட்டுமின்றி ட்ரான்ஸ்மிஷனுக்கும் ஒரே ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்தான் தேர்வாக இந்த காரில் வழங்கப்படுகிறது.

2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா!! விற்பனையில் 135% முன்னேற்றம்!

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டியின் விலைகள் ரூ.10.89 லட்சத்தில் இருந்து ரூ.14.64 லட்சம் வரையிலும், நான்காம் தலைமுறை சிட்டி ரூ.9.29 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda city clocks 135 percent hike in Nov 2020 sales. Bestseller in segment.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X