ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் அதன் சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான டீசல் என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலின் விஎக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.20.72 லட்சமாகவும், டாப் இசட்எக்ஸ் ட்ரிம்மின் விலை ரூ.22.34 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Civic Diesel BS6
VX MT ₹20,74,900
ZX MT ₹22,34,900
ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

பிஎஸ்6 தரத்தில் இதன் டீசல் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-ல் 118 பிஎச்பி பவரையும், 2000 ஆர்பிஎம்-ல் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

ப்ராண்ட்டின் ட்ரீம் தொழிற்நுட்ப சீரிஸின் ஒரு பகுதியாக ஹோண்டா சிவிக் காரில் இந்த ஐ-டிடிஇசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் என இரண்டையும் சரியான கலவையில் பெற்றுள்ள இந்த பிஎஸ்6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சிவிக் மாடலில் 23.9 kmpl மைலேஜ்ஜை பெற முடியும்.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

இந்த பிஎஸ்6 டீசல் காரின் அறிமுகம் குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் ராஜேஷ் கோய்ல் கூறுகையில், நவீன மற்றும் அட்வான்ஸான தொழிற்நுட்பங்களை இந்திய சந்தைக்கு கொண்டுவருவதில் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக உள்ளது.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

தற்போது சிவிக் மாடலின் பிஎஸ்6 டீசல் வெர்சனை அறிமுகப்படுத்தியதன் மூலம் எங்களது மொத்த செடான் லைன்அப்பும் இனி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கும். மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வெளிவந்துள்ள டீசல் சிவிக் மாடல் நிச்சயம் முழு-ரைடிங் இன்பத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறினார்.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

பிஎஸ்6 அப்டேட் மட்டுமின்றி சிவிக் மாடலின் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்கள் கூடுதலான காற்றுப்பைகளுடனும் வெளிவந்துள்ளன. இதனால் தற்போது மொத்த காற்றுப்பைகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மற்றப்படி ப்ராண்டின் இந்த ப்ரீமியம் செடான் காரில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

ஹோண்டா சிவிக் மாடல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.8 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் தேர்விலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது.

ஹோண்டா சிவிக் செடான் மாடலில் பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகம்... விலை ரூ.20.72 லட்சம்...

பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்துடன் பெரிய அளவிலான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரட்டை-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்டவை கொண்டுள்ள ஹோண்டா சிவிக் காருக்கு சந்தையில் போட்டியாக ஸ்கோடா ஆக்டேவியா போன்ற செடான் கார்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Cars India launches BS-6 compliant Civic in Diesel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X