மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

மலேசிய போலீஸார் ரோந்து பணிக்காக 425 யூனிட்கள் செடான் ரக காரான ஹோண்டா சிவிக் மாடலை சமீபத்தில் ஆர்டர் செய்துள்ளனர். இந்த நிலையில் ஆர்டர் செய்யப்பட்ட கார்கள் புத்ராஜெயா பகுதியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

மலேசியாவும் கொரோனாவினால் ஆட்டம் கண்டுள்ளதால் கார்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் டெலிவிரி செய்து அதனை சம்பந்தப்பட்ட போலீஸார் வந்து பெற்று கொள்வது என்பது தற்சமயம் அங்கு இயலாத காரியமாக உள்ளதால் ஒரு சில கார்களின் டெலிவிரியை தவிர்த்து மற்ற கார்களின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

இதுகுறித்து மலேசியா நாட்டுக்கான ஹோண்டா நிறுவனத்தின் சிஇஒ டொய்ச்சி இஷியாமா, இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை சீராக பராமரித்து வரும் போலீஸாருக்கு புதிய மொபைல் பேட்ரோல் மற்றும் அமலாக்க வாகனங்களை டெலிவிரி செய்து அவர்களது சவாலான பணிகளில் நாங்களும் சிறிது உதவியுள்ளோம் என்பதை நினைக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

மலேசிய போலீஸாருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ள ஹோண்டா சிவிக் எஸ் மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 141 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

இந்த ஆற்றலை என்ஜினானது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக முன் சக்கரங்களுக்கு வழங்கும். இந்த பெட்ரோல் என்ஜினை கொண்ட ஹோண்டா சிவிக் எஸ் மாடலின் விலை மலேசியாவில் 1,13,600 மலேசியன் ரிங்கிட்-ஆக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20.10 லட்சமாகும்.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

மொத்தம் 425 யூனிட் ஹோண்டா சிவிக் மாடல்களை அந்நாட்டு போலீஸார் வாங்கியுள்ளனர். மொத்தமாக கூட்டி பார்த்தால் 48,280,000 மலேசியன் ரிங்கிட், அதாவது ரூ.85.42 கோடியாக வருகிறது. இருப்பினும் இதனை விட சற்று கூடுதலான தொகையினையே மலேசிய அரசு ஹோண்டா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கும்.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

ஏனெனில் இந்த விலை வழக்கமான ஹோண்டா சிவிக் எஸ் மாடல் உடையது மட்டுமே. போலீஸாரின் பணிக்காக ஆர்எம்பிநெட் தகவல் தொடர்பு சாதனம், மொபைல் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் டேஸ்கேம் உள்ளிட்டவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளதால் மொத்த விலை சற்று அதிகரிக்கப்பட்டிருக்கும்.

மலேசிய போலீஸாரின் கொரோனா தடுப்பு பணியில் இணைந்த ஹோண்டா சிவிக் செடான் கார்...

வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ள இந்த கார்களில் நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் போலீஸ் வாகனம் என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முன்னதாக மலேசிய போலீஸார் ரோந்து பணிகளுக்காக 425 யூனிட் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் மாடல்களை ஆர்டர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Kementerian Dalam Negeri (KDN)

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Civic Is The Malaysian Police’s New Choice
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X