ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் தனித்துவமான சிஆர்-வி எஸ்யூவியின் புதிய ஸ்பெஷல் எடிசன் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

வழக்கமாக ஹோண்டா சிஆர்-வி காருடன் ஒப்பிடும்போது சில கூடுதல் அம்சங்களை பெற்றுவந்துள்ள ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.29.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் சிஆர்-வி காரின் விலையை காட்டிலும் ரூ.1.23 லட்சம் அதிகமாகும்.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

இந்திய சந்தையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த லிமிடேட் எடிசன் கார் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஹோண்டா சிஆர்-வி ஃபேஸ்லிஃப்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் முன்பக்கம் விற்பனையில் இருக்கும் சிஆர்-வி மாடலை காட்டிலும் சற்று வேறுபடுகிறது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

அதாவது வழக்கமான சிஆர்-வி-இல் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட முன்பக்க க்ரில் இந்த ஸ்பெஷல் எடிசனில் பளபளப்பான கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் முன்பக்க பம்பரின் டிசைனும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

பின்பக்க பம்பரும் ரீ-டிசைனில் கொண்டுவரப்பட்டுள்ளதால் கார் மொத்தமும் ப்ரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. எல்இடி விளக்குகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் க்ரோம் ஸ்ட்ரிப் பின்பக்க கதவின் வழியாக இரு டெயில்லேம்ப்களை இணைப்பது போல தான் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

18 இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் விசித்திரமான தோற்றத்தில் உள்ளன. இவை தவிர்த்து காரின் வெளிப்புறத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் சிஆர்-வி ஸ்பெஷல் எடிசன் காரும் கம்பீரமான மற்றும் நிமிர்ந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

உள்ளே, மூலைகளில் விளக்குகள், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், கால் சைகை மூலமாக செயல்படக்கூடிய பின் கதவு மற்றும் தன்னிச்சையாக இயங்கும் பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்ட வசதிகளை கூடுதலாக இந்த ஸ்பெஷல் எடிசன் பெற்றுவந்துள்ளது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 7 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், தேவைக்கு ஏற்றாற்போல் சரிசெய்து கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்ட்ர், ரிமோட் என்ஜின் போன்ற சிஆர்-வி ப்ரீமியம் எஸ்யூவியின் மற்ற வசதிகள் அனைத்தும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரிலும் தொடர்ந்துள்ளன.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் கவனத்திற்கான மானிடர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, பாதையை காட்டும் கேமிரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடியுடன் ஏபிஎஸ், ஆட்டோ ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ஒட்டுனருடன் முன்பக்க பயணிக்கு இரட்டை ஐ-எஸ்ஆர்எஸ் காற்றுப்பைகள் உள்ளிட்டவை இந்த ஹோண்டா காரில் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

இவற்றுடன் ஸ்பெஷல் எடிசன் தொகுப்பு என்ற பெயரில் ரன்னிங் போடிற்கு காஸ்மெட்டிக் பிட்கள், கதவு கண்ணாடிகளில் கார்னிஷ் மற்றும் படிக்கட்டில் ஒளி உள்ளிட்ட ஆக்ஸஸரீகளையும் சிஆர்-வி ஸ்பெஷல் எடிசனை வாங்கும் வாடிக்கையாளருக்கு ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் வழக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர், சிங்கிள் ஓவர்ஹெட் காம் ஐ-விடிஇசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 154 பிஎச்பி மற்றும் 4300 ஆர்பிஎம்-ல் 189 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் அறிமுகம்- ஷோரூம் விலை ரூ.29.5 லட்சம்

இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்கும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை சிறப்பிக்க ஹோண்டா நிறுவனம் இந்த லிமிடேட் எடிசன் காரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக விற்பனை சற்று முன்னேற்றம் அடையும் என்றும் இந்நிறுவனம் கருதுகிறது.

Most Read Articles

English summary
Honda CR-V Special Edition Launched at Rs 29.49 Lakh – What’s New
Story first published: Wednesday, October 28, 2020, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X