Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?
பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வரும் 2022ம் ஆண்டோடு குறிப்பிட்ட நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணம் மற்றும் கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவாகிய சிக்கல்கள் காரணமாக ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக சில கசப்பான முடிவெடுகளை ஹோண்டா நிறுவனம் எடுத்து வருகின்றது.

அந்தவகையில், மிக சமீபத்தில் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த கார் உற்பத்தி ஆலையை ஒட்டுமொத்தமாக இழுத்து மூடுவதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஹோண்ட நிறுவனம் பற்றி வெளிவர தொடங்கியுள்ளது.

இந்நிறுவனம் குறிப்பிட்ட ஓர் காரணத்திற்காக ஒரு நாட்டை விட்டே வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா நாட்டு சந்தையை விட்டே இந்நிறுவனம் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டோடு இந்நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் நிறுத்த இருப்பதாக அது அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றது.

வரவேற்பு குறைவு மற்றும் தொடர் விற்பனைச் சரிவு ஆகிய காரணங்களுக்காக ஹோண்டா ரஷ்யா நாட்டு வாகனச் சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றது. இதனை முன்னிட்டு டீலர்களுக்கு வாகனங்களை அனுப்பி வைக்கும் செயலையும் அது முடுக்கியுள்ளது.

தன்னுடைய உலகளவிலான வர்த்தகத் திட்டத்தை ஹோண்டா நிறுவனம் அண்மையில் மாற்றியமைத்தது. இந்த புதிய திருத்தத்தின்போதே ரஷ்யா நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தை உறுதி செய்தது. நாட்டை விட்டு வெளியேறினாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையைத் தொடர்ந்து தொடருவோம் என ரஷ்யர்களுக்கு அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

ஆகையால், ஏற்கனவே ஹோண்டா காரை வாங்கிய முகவர்கள் ஹோண்டாவின் வெளியேற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் வரவேற்பைப் பெறாத சூழலே ரஷ்யாவில் ஹோண்டாவிற்கு நிலவி வந்திருக்கின்றது.

இதனால், கடந்த காலங்களில் உற்பத்தியைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையை அது எடுத்திருந்தது. இந்த நிலையிலேயே அதிரடியாக ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அது அறிவித்திருக்கின்றது. நடப்பாண்டின் 11 மாதங்களில் ஒட்டுமொத்தமாகவே 1,383 யூனிட் வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனைச் செய்திருக்கின்றது.

இது கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவாகும். குறிப்பாக, 2020 நவம்பரில் மட்டும் 50 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஹோண்டா சந்தித்திருக்கின்றது. அம்மாதம் முழுக்க வெறும் 79 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த மிக மிக மோசமான விற்பனை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே ரஷ்யாவை விட்டு ஹோண்டா வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.