அசத்தலான ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

கியா செல்டோஸ் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படும் ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம் கொடுத்துள்ளது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நீண்ட காலமாகவே தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன. ஆனால், இதுவைர வந்தபாடில்லை. எனினும், இந்தியாவில் அவ்வப்போது இந்த எஸ்யூவி தென்பட்டு வருகிறது.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

இந்த வகையில், தற்போது ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் தென்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஹோண்டா கார் ஆலை வளாகத்தில் 4 எச்ஆர்வி எஸ்யூவி கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

எனவே, இந்த புதிய எஸ்யூவி மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற ஆவல் எழுந்துள்ளது. ஏனெனில், இந்த மிட்சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பு இருக்கிறது. எனவே, நிச்சயம் வரும் என்று நம்பப்படுகிறது.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் ரக டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், பிற மாடல்களைவிட மிகவும் கம்பீரமாகவும், நேர்த்தியாகவும் டிசைன் செய்யப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சமாக கூறலாம்.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

ஹோண்டா சிட்டி பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன் இந்த கார் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த கார்கள் சோதனை ஓட்டத்திற்காக தருவிக்கப்பட்டு இருப்பதாகவே பொருள் கொள்ளலாம். எனவே, விரைவில் இந்த கார்களை சாலைகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதுதான் இந்த கார் இந்தியாவில் வருவது ஊர்ஜிதமாகும்.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

மேலும், ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டபிள்யூஆர்வி க்ராஸ்ஓவர் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, அதே பாணியில் இந்த புதிய மாடலுக்கும் வரவேற்பு சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

மேலும், பிஆர்வி மூலமாக விற்பனையில் பெரிய வர்த்தகத்தை பெற முடியாத நிலையில், டபிள்யூஆர்வி மற்றும் புதிய எச்ஆர்வி மாடல்களை வைத்து ஓரளவு எஸ்யூவி மார்க்கெட்டில் திடப்படுத்திக் கொள்ளலாம் என்று ஹோண்டா கருதுவதாக எடுத்துக் கொள்ள முடியும்.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் தரிசனம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த கார் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார்களை குறிவைத்து களமிறக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

Spy Images: Gaadiwaadi

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
The all new Honda HR-V, crossover model have been spotted at Honda India's Tapukara car plant in Rajasthan.
Story first published: Wednesday, March 18, 2020, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X