ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

விற்பனையை அதிகரிக்கும் விதமாக, ஹோண்டா சிட்டி மற்று அமேஸ் கார்களுக்கான டிஸ்கவுண்ட் ஆஃபர் தொடர்ந்து வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

கொரோனா பிர்சனையால் கார் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவிலிருந்து மீண்டு எழுவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் இறங்கி இருக்கின்றன. இதற்காக பல்வேறு சிறப்பு டிஸ்கவுண்ட் ஆஃபர்களை கார் நிறுவனங்கள் கடந்த மாதம் முதல் வழங்கி வருகின்றன.

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

அந்த வகையில், ஹோண்டா நிறுவனமும் தனது கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்களை ஜூனிலும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஹோண்டா சிட்டி மற்றும் அமேஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

ஹோண்டா அமேஸ் (AMAZE)

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.32,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களுக்கு இந்த ஆஃபர் பெற முடியும். பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஹோண்டா அமேஸ் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்புள்ளது.

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

தவிரவும், வாடிக்கையாளர்களுக்கு ரூ12,000 மதிப்புடைய கூடுதல் வாரண்டி கால ஆஃபரையும் வழங்குகிறது. கார் பராமரிப்புத் திட்டத்தை 50 சதவீத கழிவுக் கட்டணத்தில் வழங்குவதாகவும், ரூ.8,000 வரை சேமிக்க முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

MOST READ : தீவிரமாக பரவும் வரைஸ்! அச்சத்தில் மக்கள்! நம்பிக்கையை விதைக்க புதிய தந்திரத்தை கையாளும் எடப்பாடியார்

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

ஹோண்டா சிட்டி (CITY)

ஹோண்டா சிட்டி காரின் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், SV, V மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கும், V சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெற முடியும்.

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

அதேபோன்று, VX மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.37,000 தள்ளுபடியும், ரூ.35,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படும். மேலும், ZX மேனுவல் வேரியண்ட்டிற்கும், VX மற்றும் ZX சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கும் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.50,000 நேரடி தள்ளுபடியும் பெற முடியும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. அதாவது, ரூ.1 லட்சம் வரை டாப் வேரிண்ட்டுகளுக்கு டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்பு உள்ளது.

MOST READ : ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1 லட்சம் டிஸ்கவுண்ட் ஆஃபர்... விபரம் உள்ளே!

ஹோண்டா அமேஸ் மற்றும் சிட்டி கார்களின் பிஎஸ்6 மாடல்களுக்கு கடந்த மாதம் முதலே டிஸ்கவுண்ட் ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனையை அதிகரிக்கும் விதமாக தொடர்ந்து இந்த டிஸ்கவுண்ட் ஆஃபர் வரும் ஜூன் 30 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Honda India is offering total benefits of up to Rs 32,000 on the Amaze and up to Rs.1 lakh on the City BS6 variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X