எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி மாடலை ஹோண்டா களமிறக்க உள்ளது. இந்த எஸ்யூவி பற்றிய முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. குறிப்பாக, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, அனைத்து நிறுவனங்களையும் இந்த ரகத்தில் இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது. நிஸான் நிறுவனம் இந்த ரகத்தில் புதிய மாடலை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது ஹோண்டா கார் நிறுவனமும் இந்த ரகத்தில் புதிய மாடலை கொண்டு வர திட்டம் போட்டுள்ளது.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

அதன்படி, தனது அடுத்த தலைமுறை எச்ஆர்வி எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு வாக்கிலேயே ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக காற்று வாக்கில் செய்தி அடிபட்டது.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

ஆனால், எச்ஆர்வி எஸ்யூவியை கொண்டு வருவதில் ஹோண்டா ஆர்வம் காட்டவில்லை. ஆனால், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கான வரவேற்பு தற்போது ஹோண்டா நிறுவனத்தை யோசிக்க வைத்துள்ளதுடன், கூடிய விரைவில் எச்ஆர்வியை கொண்டு வருவதற்கு பரிசீலித்து வருகிறது.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

எனினும், கொரோனாவால் இந்திய கார் மார்க்கெட் தள்ளாடி வருவதால், அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம்.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி 4,400 மிமீ நீளமும், 1,790 மிமீ அகலமும், 1,590 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். மேலும், இதன் வீல் பேஸ் 2,610 மிமீ ஆக உள்ளது. இந்த காரில் உட்புற இடவசதி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகள் சப்போர்ட், இணைய வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

ஹோண்டா நிறுவனத்தின் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இணைக்கும் வசதி கொடுக்கப்படும். அலெக்ஸா ரிமோட் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி!

எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களைவிட பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்படும். அதற்கு தக்கவாறு விலையும் நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் தரம், பிரிமீயம் அந்தஸ்து இதற்கு வலு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
The launch of the Honda HR-V in the Indian market has been in the pipeline for quite a while now. Honda had first showcased an interest in launching the SUV back in 2017 but did not. However, now the company is working introducing the new-gen version for the HR-V mid-size SUV.
Story first published: Saturday, June 27, 2020, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X