எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

கடந்த அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

ஹோண்டா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 10,836 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,010 கார்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இது 8 சதவீத வளர்ச்சியாகும். ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 10,000க்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், ஃபோர்டு, எம்ஜி, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முன்னதாக, ஹோண்டா 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 3.2 சதவீதமாக இருந்தது. சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெறுவதற்கு ஹோண்டா பெரும்பாலும் தனது செடான்களையே நம்பியுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக செடான்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. மாருதி சுஸுகி டிசையரை தவிர வேறு எந்த செடானும் இந்தியாவில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டுவதில்லை. அந்த டிசையரின் போட்டியாளரான அமேஸ்தான் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் கார் ஆகும்.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

கடந்த அக்டோபர் மாதம் ஹோண்டா நிறுவனம் 4,709 அமேஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,134 ஆக இருந்தது. இது 8 சதவீத வீழ்ச்சியாகும். நடப்பாண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போதும் இந்த சப்-4 மீட்டர் செடான் 13 சதவீத வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

அதே சமயம் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான ஹோண்டா கார்களின் பட்டியலில் சிட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 4,124 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 1,887 ஆக மட்டுமே இருந்தது. இது 119 சதவீத வளர்ச்சியாகும்.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் பட்டியலில் டபிள்யூஆர்-வி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1,100 டபிள்யூஆர்-வி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 1,367 ஆக இருந்தது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும். 4வது இடத்தை ஜாஸ் பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் 642 ஜாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 750 ஆக இருந்தது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

5வது இடத்தை சிவிக் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 436 ஆக இருந்த சிவிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 230 ஆக சரிந்துள்ளது. இது 47 சதவீத வீழ்ச்சியாகும். இதுதவிர கடந்த அக்டோபரில் 31 சிஆர்-வி கார்களும் விற்பனையாகியுள்ளது. கடந்த அக்டோபரில் அதிகம் விற்பனையான ஹோண்டா கார்களின் பட்டியில் 6வது மற்றும் கடைசி இடத்தை இது பிடித்துள்ளது.

எஸ்யூவி காலத்தில் செடான்களை நம்பியிருக்கும் ஹோண்டா... அக்டோபரில் அவ்வளவு பிரமாதம் இல்ல...

ஆனால் சிஆர்-வி காரும் 80 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் 152 ஆக இருந்த சிஆர்-வி கார்களின் விற்பனை நடப்பாண்டு அக்டோபரில் வெறும் 31 ஆக சரிந்துள்ளது. இந்தியாவில் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை சக்கை போடு போடுகிறது. ஆனால் செடான்களை நம்பியுள்ள ஹோண்டா பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய முடியாத சூழலில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Sales Analysis - October 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X