எம்ஜி ஹெக்டருக்கு கிடைத்த வரவேற்பு... எச்ஆர்வியை மனதில் வைத்து ஆழ்ந்த யோசனையில் ஹோண்டா!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள வரவேற்பை மனதில் வைத்து, எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே, மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பும் இந்தியாவில் தடாலடியாக உயர்ந்துள்ளது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

இதில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், எம்ஜி ஹெக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பிற நிறுவனங்களையும் இந்த ரகத்தில் புதிய மாடலை களமிறக்குவதற்கு தூண்டி வருகிறது.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனமும் எம்ஜி ஹெக்டர் மார்க்கெட்டை குறிவைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில் டபிள்யூஆர்வி மற்றும் சிஆர்வி ஆகிய இரண்டு மாடல்களுக்கு இடையில் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் ரூ.20 லட்சம் வரை விலை வித்தியாசம் இருக்கிறது. எனவே, மிட்சைஸ் எஸ்யூவியை களமிறக்குவது சிறப்பானதாக கருதுகிறோம். அதற்கு எச்ஆர்வி எஸ்யூவி சரியான தேர்வாக இருக்கும். எனவே, இந்த மாடலை கொண்டு வருவது குறித்து தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

கடந்த சில ஆண்டுகளாகவே ஹோண்டா எச்ஆர்வி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவ்வப்போது செய்தி வெளியாவது, அடங்குவதுமாக இருந்து வருகிறது. அதாவது, இந்த எஸ்யூவிக்கு 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்தப்படும் நிலை. மீதமுள்ள 70 சதவீத பாகங்களை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யும் கட்டாயம் இருந்தது.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

இதன் காரணமாக, போட்டியாளர்களை விட விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை மனதில் வைத்தே இந்த எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவதற்கு ஹோண்டா தயக்கம் காட்டி வருகிறது. ஆனால், தற்போது இந்த செக்மென்ட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை தற்போது ஹோண்டா கையில் எடுத்துள்ளது.

 எச்ஆர்வியை இந்தியா கொண்டு வர துடிக்கும் ஹோண்டா!

ஹோண்டா எச்ஆர்வி க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் கச்சிதமாக பொருந்தும். ஆனால், சந்தைப் போட்டி பலமாக இருப்பதால், விலையை சரியாக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஹோண்டா பிராண்டு மதிப்பை மனதில் வைத்து இந்த எஸ்யூவியை தேர்வு செய்வதற்கு பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள்.

Most Read Articles

English summary
Japanese car maker, Honda is considering to bring HR-V mid size to India again.
Story first published: Tuesday, July 28, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X