Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்
பிஎஸ்-6 எஞ்சின்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஹோண்டா ஜாஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மாடல் எதிர்பாராத அளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் மாடலாக இருப்பதுடன் தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தை ஈர்த்துள்ளது. புதிய மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது. இந்த மாடலில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளும் உள்ளன.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 தரமுடைய இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. பழைய வண்ணத் தேர்வுகளிலேயே தொடர்ந்து கிடைக்கும்.

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடலானது எஸ்வி மற்றும் விஎக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரூ.8.50 லட்சம் முதல் ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.