கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இந்த ரகசியத்தை யாருமே சொல்ல மாட்டாங்க!

அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருள்களின் விலையும் நாம் எதிர்பாராத அளவு உச்சத்தைத் தொட்டு வருகின்றது. இதில் இருந்து தீர்வு காணும் விதமாக இளைஞர் ஓர் தீர்வை வழங்கியிருக்கின்றார். வாருங்கள் அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருள்களின் விலையுமே நாம் எதிர்பார்திராத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இதில் தீர்வு காண மின்சார வாகனமே ஒரே வழியாக உள்ளது. இந்நிலையில்தான் இளைஞர் ஒருவர் எரிபொருளின் விலையுயர்வில் இருந்து தப்பிக்கும் விதமாக, வழக்கமான எரிபொருள் காரை எப்படி மின்சார வாகனமாக மாற்றுவது என்பது குறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

உலகம் முழுவதும் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அவை, சற்று அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் எரிபொருள் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எட்ட முடியாமல் தவித்து வருகின்றது. இதற்கு மின்சார வாகனத்தின் விலையை மட்டுமே காரணமாகக் கூறிவிடாது.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

ஏனென்றால் மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு இந்தியாவில் போதுமான அளவு இல்லை என்பதும் நாம் நிராகரிக்க முடியாத ஓர் உண்மையாக இருக்கின்றது.

எனவேதான், தற்போதும் எரிபொருள் வாகனங்களுக்கான விற்பனை ஓர் கிங்கைப் போல் உச்சத்தில் உள்ளது. அதேசமயம், எலெக்ட்ரிக் வாகனங்கள்குறித்த ஆவல் மக்கள் மத்தியில் சற்றும் குறைச்சலின்றி காணப்படுகின்றது.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

மின்சார வாகனங்கள் குறைந்த பராமரிப்பில் அதிக பயனை அளிப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதாவது, பெட்ரோல் வாகனங்களில் ஒரு கிமீ செல்ல குறைந்தது 6 ரூபாயை நாம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

அதுவே மின்சார வாகனத்தில் ஒரு கிமீ பயணிக்க வேண்டுமானால் ரூ. 1 மட்டுமே போதுமானதாக உள்ளது. இதுவே மின்வாகனங்களின் பக்கம் மக்களைச் சுண்டியிழுக்க காரணமாக உள்ளது.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

ஆனால், அவற்றின் விலை மற்றும் போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாதது அதன் விற்பனையை தற்போதும் குழந்தை பருவத்திலேயே வைத்திருக்கின்றது.

இந்நிலையில்தான் குறைந்த செலவில் வழக்கமான ப்யூவல் வாகனத்தை மின்சார வாகனமாக கன்வெர்ட் (மாற்றம்) செய்வது எப்படி என்பதை விளக்கும் வகையில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

இதனை புனேவைச் சார்ந்த இளைஞர்கள் (நண்பர்கள்) குழுவாக செய்துள்ளனர். இவர்கள் இதுபோன்று வழக்கமான எரிபொருள் வாகனங்களை மின் வாகனமாக மாற்றுவது முதல் முறை அல்ல. ஏற்கனவே இக்குழு செவ்ரோலட் பீட் மாடலை மின்சார வாகனமாக மாற்றியிருந்தது.

இந்நிலையிலேயே, பிறருக்கு மின்சார வாகனம் பற்றியும், அது எப்படி மாடிஃபை செய்யப்படுகிறது என்பதை விளக்கும் வகையிலும் வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

அதனை ஹேமங்க் தபாதே எனும் யுடியூப் தளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளனர். இம்முறை மாடிஃபிகேஷன் பணிக்காக இந்தியர்களின் மிகவும் பிரியமான கார்களில் ஒன்றான மாருதி 800 மாடலை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை சின்னத்திரையில் வரும் நாடகத்தைப் போன்று பாகங்களாக வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவையனைத்தும் ஹேமங்க் தபாதே தளம் வாயிலாக மட்டுமே வெளியிடப்பட இருக்கின்றது. எனவே அடுத்தடுத்த வீடியோக்களுக்கு அவர்களுடன் இணைந்திருப்பது கட்டாயமாகியுள்ளது. சரி வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

மாருதி 800 கார் மின்சார காராக மாறுவதற்காக ஒரு சில இழப்புகளைச் சந்தித்துள்ளது. அதில், முக்கியமானதாக எரிபொருள் எஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த இழப்பைத்தொடர்ந்து, காலியான இடங்களை நிரப்பவதற்காக மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தியை வழங்குவதற்காக பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

இதில் அதிக கவனம் மின் மோட்டாரைப் பொருத்துவதற்கும், அதற்கான சேஸிஸை உருவாக்குவதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்றே மற்ற பாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பாகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பு 3டி மாதிரிகள் உருவாக்கப்பட்ட பின்னரே உண்மையான கூறுகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிடு கிடுவென உயரும் பெட்ரோல்-டீசல் விலை! தப்பிக்க என்ன வழி? இளைஞர் கூறும் இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க...

இதேபோன்று, காரின் உட்பகுதியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் மிக முக்கியமான மாற்றமாக கிளட்ச் மற்றும் பிரேக் பெடல்கள் நீக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, சற்று அகலமான பிரேக் பெடல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதையடுத்து மாருதி 800 தோற்றத்திலும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், அக்காரை சற்று ஸ்போர்ட்டி லுக்கிற்கு அப்கிரேட் செய்யும் விதமாக ஸ்போர்ட்டி வீல், இருக்கை உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த மாடிஃபிகேஷன் இன்னும் முழுமையடைவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ச்சியாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
 
English summary
How To Convert Maruti 800 Into EV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X