ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

விற்பனையில் பட்டையை கிளப்பிவரும் ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை க்ரெட்டாவை இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த மார்ச் மாதத்திலேயே புதிய தலைமுறை க்ரெட்டா விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

முதல் தலைமுறை க்ரெட்டா கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து வந்தது. இதற்கிடையில் 2019 ஆகஸ்ட்டில் அறிமுகமான கியா சொல்டோஸ், ஹூண்டாய் துணை நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக மாறியது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

அட்டகாசமான உபகரணங்களை கொண்ட ப்ரீமியம் தரத்திலான தொகுப்புகளுடன் செல்டோஸ் வழங்கப்பட்டதால் பல மாதங்களாக விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருந்த ஹூண்டாய் கிரெட்டாவின் இடத்தை எளிதாக பிடித்தது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

இருப்பினும், புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா அதன் அறிமுகத்தில் இருந்து சில வாரங்களுக்கு உள்ளேயே மீண்டும் தனது பழைய முதலிடத்தை சொந்தமாக்கி கொண்டது. தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக மிக அதிக அளவில் விற்பனையாகும் நடுத்தர அளவிலான எஸ்யூவியாக 2020 க்ரெட்டா உருவெடுத்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

இந்த நிலையில் க்ரெட்டாவின் ரேஞ்ச்சை அதன் ஏழு இருக்கை வெர்சனின் மூலம் இந்தியாவில் விரிவுப்படுத்த அடுத்த ஆண்டில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. அல்கஸார் என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஏழு இருக்கை க்ரெட்டா, ஹூண்டாயின் தாயகமான தென் கொரியாவில் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

மூன்று இருக்கை வரிசைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏழு இருக்கை வெர்சன் கார், ப்ரீமியம் தரத்திலான எஸ்யூவியில் அதிக நபர்கள் அமரும் வகையில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது. இதனால் இதற்கு தற்சமயம் விற்பனையில் உள்ள எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் முக்கிய போட்டியாளர்களாக விளங்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

அல்கஸார், வழக்கமான ஐந்து-இருக்கை க்ரெட்டா உடன் ஒப்பிடும்போது சில சிறிய டிசைன் மாற்றங்களை பெற்று வரலாம். குறிப்பாக காரின் பின்பகுதி கூடுதல் இருக்கை வரிசைக்காக சற்று பெரியதாக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக புதிய டிசைனில் டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய வடிவத்தில் டெயில்கேட் உள்ளிட்டவற்றை காரின் பின்பகுதி ஏற்றிருக்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏழு-இருக்கை வெர்சன்... அல்கஸார்... அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம்

அதேபோல் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசை வருவதால் பின்பக்கத்தில் சேமிப்பிடம் சில விளிம்புகளை இழக்கலாம். 2021 ஹூண்டாய் அல்கஸாரில் 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் மற்றும் 1.4 லிட்டர் கப்பா டி-ஜிடிஐ போன்ற என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Seven-Seater Hyundai Creta (Alcazar) Launch Expected In Mid-2021
Story first published: Friday, September 25, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X